இந்த 2023 ஆம் ஆண்டில் இந்திய சினிமா ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த திரைப்படங்களில் ஒன்றாக வெளிவர இருக்கும் தளபதி விஜயின் லியோ திரைப்படத்தை பார்த்த உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தனது முதல் விமர்சனத்தை பதிவு செய்ததோடு LCU சஸ்பென்ஸையும் போட்டு உடைத்து விட்டார். நாளுக்கு நாள் எதிர்பார்ப்புகளை அதிகரித்துக் கொண்டே இருக்கும் தளபதி விஜயின் லியோ திரைப்படம் நாளை வியாழக்கிழமை அக்டோபர் 19ஆம் தேதி ரசிகர்களுக்கு ஆக்சன் ட்ரீட்டாக வெளி வருகிறது. மாஸ்டர் திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு 2வது முறையாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்திருக்கும் லியோ திரைப்படத்திற்கு முதல் அறிவிப்பு வருவதற்கு முன்பிருந்தே எதிர்பார்ப்புகள் கிளம்பின.

முன்னதாக கில்லி, திருப்பாச்சி, ஆதி மற்றும் குருவி ஆகிய படங்களில் இணைந்து நடித்த ரசிகர்களின் ஃபேவரட் PAIR-ஆன தளபதி விஜய் - திரிஷா ஜோடி 15 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது லியோ திரைப்படத்தில் இணைந்திருக்கிறது. மேலும் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், ஆக்ஷன் கிங் அர்ஜுன், பிரியா ஆனந்த், இயக்குனர் மிஷ்கின், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், இயக்குனர் அனுராக் கஷ்யப், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர், மலையாள நடிகர் மேத்யூ தாமஸ், மறைந்த நடிகர் மனோபாலா, ஜார்ஜ் மர்யன், அபிராமி வெங்கடாசலம், சாந்தி மாயாதேவி மற்றும் பிரபல தமிழ் கிரிக்கெட் வர்ணனையாளர் பிரதீப் முத்து ஆகியோர் லியோ திரைப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர். மனோஜ் பரமஹம்சா அவர்களின் அட்டகாசமான ஒளிப்பதிவில் பிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்திருக்கும் லியோ திரைப்படத்திற்கு ராக் ஸ்டார் அனிருத் இசை அமைத்திருக்கிறார்.

கடைசியாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடித்து வெளிவந்த விக்ரம் திரைப்படம் தமிழ் சினிமாவில் இண்டஸ்ட்ரி ஹிட்டாக 500 கோடி ரூபாய் வரை வசூலித்த பிளாக்பஸ்டர் வெற்றி, கைதி & விக்ரம் படங்களை கொண்டு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உருவாக்கி இருக்கும் LCU யூனிவர்ஸ், 100% லோகேஷ் படம் உள்ளிட்ட பல காரணங்கள் லியோ திரைப்படத்திற்கு ஆரம்பத்திலேயே ஹைப்பை ஏற்றியது. இந்த நிலையில் தற்போது லியோ திரைப்படத்தை பார்த்த உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தனது X பக்கத்தில் முதல் விமர்சனத்தை பகிர்ந்து இருக்கிறார். அந்த விமர்சனத்தில், “தளபதி விஜய் அண்ணாவின் லியோ 👍🏽👍🏽👍🏽… இயக்குனர் லோகேஷ் கனகராஜின் சிறந்த ஃபிலிம் மேக்கிங்… அனிருத்தின் இசை அன்பறிவு மாஸ்டர்கள் 👏👏👏… #LCU 😉! ஆல் தி பெஸ்ட் டீம்!” எனக் குறிப்பிட்டு பதிவிட்டு இருக்கிறார். லியோ திரைப்படத்தின் முதல் விமர்சனத்துடன் LCU குறித்த சஸ்பென்ஸையும் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் போட்டு உடைத்ததால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகமடைந்து இருக்கின்றனர். லியோ திரைப்படம் LCU வில் இருப்பது உறுதியாகி இருப்பதால் நாளை ரசிகர்களுக்கு காத்திருக்கும் ஆக்சன் சம்பவத்தோடு சர்ப்ரைஸ் சம்பவமாக இன்னும் என்னெல்லாம் இருக்கிறதோ என மிகப் பெரிய எதிர்பார்ப்புகளும் தற்போது கிளம்பி இருக்கின்றன. தளபதி விஜயின் ACTION PACKED லியோ திரைப்படத்தை பார்த்த உதயநிதி ஸ்டாலின் அவர்களின் விமர்சனம் இதோ…