தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் சிலம்பரசன் மற்றும் நடிகை ஹன்சிகா மோத்வானி இணைந்து நடித்துள்ள திரைப்படம் மஹா . ETCETERA என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் V.மதியழகன் தயாரித்துள்ள மஹா திரைப்படத்தை இயக்குனர் U.R.ஜமீல் எழுதி இயக்கியுள்ளார்.
மஹா திரைப்படத்தில் ஹன்சிகா மோட்வானியுடன் இணைந்து நடிகர் ஸ்ரீகாந்த் மற்றும் பிக் பாஸ் புகழ் நடிகை சனம் ஷெட்டி உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ளனர். நடிகர் சிலம்பரசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மஹா ஹன்சிகா மோட்வானியின் 50வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரபல ஒளிப்பதிவாளரான R.மதி ஒளிப்பதிவு செய்யும் மஹா படத்திற்கு தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரான ஜிப்ரான் இசையமைக்கிறார். இதுவரை வெளிவந்த மஹா திரைப்படத்தின் போஸ்டர்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்ற நிலையில் மஹா படத்தின் டீசருகாக ரசிகர்கள் வெகுநாட்களாக காத்திருந்தனர்.
ஜூலை 2 ஆம் தேதியான இன்று மாலை 6 மணிக்கு டீசர் வெளியாகும் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி சரியாக ஆறு மணிக்கு மஹா திரைப்படத்தின் டீசர் வெளியானது. அதிரடியான இந்த மஹா திரைப்படத்தின் டீசர் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்து சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.