தனுஷ் நடிப்பில் நாளை பிரம்மாண்டமாக வெளியாகவுள்ள திரைப்படம் ‘வாத்தி’. தமிழிலும் தெலுங்கிலும் வெளியாகும் இப்படத்தை வரவேற்க ரசிகர்கள் ஆரவாரத்துடன் வரவேற்க தயாராகவுள்ளனர். சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் பார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் இணைந்து தயாரிக்கும் வாத்தி திரைப்படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கவுள்ளார். இப்படத்தில் தனுஷுடன் இணைந்து சம்யுக்தா, சமுத்திரக்கனி, சாய் குமார், ஆடுகளம் நரேன், இளவரசு, கென் கருணாஸ், மொட்ட ராஜேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வாத்தி படத்திலிருந்து பாடல்கள் தமிழ் மற்றும் தெலுங்கில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. நாளை வெளியாகவிருக்கும் வாத்தி திரைப்படத்தை பார்ப்பதற்கு உகந்த 7 காரணங்களை விளக்குவதே இந்த தொகுப்பு.

1. சமுத்திரகனி கூட்டணி

மிகப்பெரிய பிளாக் பஸ்டர் கொடுத்த ‘வேலையில்லா பட்டதாரி’ திரைப்படத்தில், தனுஷ் – சமுத்திரகனி கூட்டணி மிகப்பெரிய கவனம் பெற்றது. இந்த கூட்டணி தொடர்ந்து வேலையில்லா பட்டதாரி, வடசென்னை, மாறன் ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ளனர். இதில் குறிப்பாக வடசென்னை திரைப்படத்தில் சமுத்திரகனி – தனுஷ் கூட்டணி மீண்டும் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. இந்த வெற்றி கூட்டணி மீண்டும் வாத்தி திரைப்படத்தில் இணைந்துள்ளதால் நிச்சயம் இருவரின் கூட்டணி காட்சி இந்த முறையும் அதிகம் பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2. ஜி வி பிரகாஷ் குமார்

ஆறாவது முறையாக கூட்டணி அமைக்கும் தனுஷ் - ஜிவி பிரகாஷ் குமார் கூட்டணிக்கே தனி ரசிகர் கூட்டம் இருந்தது. இதற்கு முன்பு பொல்லாதவன், மயக்கம் என்ன, ஆடுகளம், அசுரன், மாறன் ஆகிய படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளனர். இதில் பெரும்பாலான பாடல்கள் சூப்பர் டூப்பர் ஹிட். வாத்தி படத்திலும் எதிர்பார்த்த அளவு பாடல்கள் சிறப்பாகவே இருந்தது. இதில் வா வாத்தி பாடல் இப்போதும் டிரெண்டிங்கில் உள்ளது.

3. சம்யுக்தா

பிரபல மலையாள நடிகையான சம்யுக்தா தென்னிந்தியா முழுவதும் தனி ரசிகர் கூட்டத்தையே வைத்துள்ளார். இவர் முதல் முதலில் தமிழில் நடிக்கும் பெரிய திரைப்படம். மேலும் தனுஷுடன் நடித்துள்ளார் என்பதே மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கி உள்ளது. டிரைலர் மற்றும் வா வாத்தி பாடல்களில் ஏற்கனவே ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

4. வெங்கி அட்லூரி - தனுஷ்

தெலுங்கு இயக்குனர்கள் சமீபத்தில் தமிழில் வருகை தந்து வருகிறார்கள் முன்னதாக வம்சி இயக்கிய தோழா மிகப்பெரிய வெற்றி பெற்றது. சமீபத்தில் வெளியான தளபதி விஜயின் வாரிசு வசூலில் மிகப்பெரிய வெற்றி பெற்று சாதனை படைத்து வருகிறது. அந்த வகையில் வம்சியின் உதவி இயக்குனரான வெங்கியின் வருகை எந்தளவு ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் என்று திரையுலகமே எதிர்பார்த்து கொண்டிருக்கின்றது.

5. தெலுங்கு திரையுலகில் தனுஷ்

தனுஷ் மற்ற மொழியில் நடிக்கவுள்ளார் என்றாலே அதற்கு ஒரு எதிர்பார்ப்பு உருவாகிவிடும். முன்னதாக இந்தியில் ராஞ்சனா திரைப்படத்தில் நடித்து பிளாக் பஸ்டர் கொடுத்தார் அதனை தொடர்ந்து பாலிவுட்டிலும் பிரபலமடைந்தார் தனுஷ். தொடர்ந்து ஷமிதாப், அதிரங்கி ரே ஆகிய படங்களில் நடித்துள்ளார். மேலும் அதனை தொடர்ந்து மேல்நாட்டு மொழியில் ‘ஃபக்கீர்’, ‘தி கிரே மேன்’ திரைப்படத்தில் நடித்து கவனம் பெற்றார். தொடர் மற்ற மொழிகளில் கவனம் ஈர்த்த தனுஷ் தற்போது தெலுங்கு மொழியில் அதிரடியாக அறிமுகமாகவுள்ளார். நிச்சயம் வாத்தி, சார் படமும் நல்ல வரவேற்பை பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

6. தனுஷ் – வாத்தி

எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கச்சிதமாக நடிக்கும் தனுஷ். அவர் ரசிகர்களுக்கு பிடித்தது போலவும் கதைக்கு ஏற்ற கதாபாத்திரமாகவும் இணங்கி நடிப்பதில் தேர்ந்தவர். ஒரே நேரத்தில் ஸ்டாராகவும், சிறந்த நடிகராகவும் தனுஷ் தற்போது அசத்தி வருகிறார். அதன் படி தனுஷ் முதல் முதலில் வாத்தி ஆசிரியராக நடித்துள்ளார். டிரைலரில் வித்யாசமாக துறுதுறு கதாபாத்திரத்தில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியிருப்பார். நிச்சயம் இந்த கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கும் அளவு தனுஷ் கொடுத்திருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

7. வாத்தி

மனித நாகரிக வளர்ச்சிக்கு மிக முக்கியமானது கல்வி அத்தகைய கல்வி வியாபாரமாக மாறி. ஊழல் அதிகமாகிவிட்டது. இத்தகைய பெரும் செய்தியை நேர்த்தியாக பேசும் படமாக இந்த வாத்தி திரைப்படம் இருக்கும் என்று இயக்குனர் வெங்கி அட்லூரி முன்னதாக கூறியிருந்தார். அதன் படி இந்த கதை சமகால சந்ததியினருக்கு மிக முக்கியமான விழிப்புணர்வை பேசும் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.