திரையுலகின் சிறந்த நடிகைகளில் ஒருவர் சமந்தா. கடைசியாக தியாகராஜா குமாரராஜா இயக்கிய சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்தார். பிரேம்குமார் இயக்கத்தில் 96 தெலுங்கு ரீமேக்கான ஜானு திரைப்படத்தில் நடித்தார். தமிழ் மொழி படங்கள் மட்டுமின்றி தெலுங்கு சினிமாவிலும் ரசிகர்களை ஈர்த்துள்ளார்.

கொரோனா காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் வீட்டிலேயே பாதுகாப்பாக முடங்கியுள்ள சமந்தா உடற்பயிற்சி, யோகா, சமையல் மற்றும் தோட்டக்கலை போன்றவற்றில் ஆர்வம் காட்டி வருகிறார். லாக்டவுனில் ரசிகர்களின் பதிவை கவனிப்பது என சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார். கடைசியாக வீட்டில் இருந்தபடி விவசாயம் செய்வதெப்படி என்ற டிப்ஸை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வழங்கினார் சமந்தா.

சமீபத்தில் வீட்டில் இருக்கும் செல்ல நாய்க்குட்டிகளுடன் சமந்தா விளையாடும் வீடியோ ஒன்று வெளியாகி வைரலானது. இந்நிலையில் நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஒரு மீமை பகிர்ந்துள்ளார். அவர் யோகா செய்து வெளியிட்ட புகைப்படத்தை வைத்து, ஸ்பைடர்மேனுக்கு பதிலாக வடிவமைக்கப்பட்ட மீமை பகிர்ந்துள்ளார். மற்றவர்களை பார்த்து சிரிக்கும் பொழுது, நம்மை பார்த்தும் சிரித்துகொள்ள தெரிய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். அண்மையில் தலைகீழாக நின்றபடி சமந்தா வெளியிட்டு வரும் யோகா போஸ் புகைப்படங்களும் இணையத்தை ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த லாக்டவுனில் பயனுள்ள விஷயங்களான கார்டனிங் மற்றும் டயட் பற்றி சமந்தா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தை தெறிக்க விடுகிறது. கொரோனா சூழலில் அனைவரும் சூப்பர்மார்கெட்டுக்கு விரைவதை காண முடிகிறது. இதுகுறித்து தன் ரசிகர்களுக்கு அருமையான வீடியோ பதிவை செய்துள்ளார் சமந்தா.

நடிகை சமந்தா அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாராவும் நடிக்கவுள்ளனர். லாக்டவுன் முடிந்த பிறகு இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

After taking food for granted all my life, this pandemic lockdown taught me a new way of eating and a new hobby. I learnt to grow my own food in my own home! A shaking experience but I am glad this happened. #growwithme

A post shared by Samantha Akkineni (@samantharuthprabhuoffl) on