நேர்கொண்ட பார்வை வெற்றியை தொடர்ந்து போனி கபூர் தயாரிப்பில் H.வினோத் இயக்கத்தில் தல அஜித் நடித்து வரும் படம் வலிமை. ஐதராபாத், சென்னை என இந்த படத்தின் ஷூட்டிங் பணிகள் மாறி, மாறி நடைபெற்று வந்த நிலையில், கொரோனா பாதிப்பு காரணமாக தற்போது ஒட்டு மொத்தமாக படப்பிடிப்பு பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது. 

இந்த ஆண்டு 2020ல் கோலிவுட்டில் பெரிய படங்கள் வரிசை கட்டி வரப் போவதாகவும், பாக்ஸ் ஆஃபிஸ் கலெக்‌ஷன் எகிறும் என்றும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் பலரும் கணித்து கணக்குகள் போட்டு வந்தனர். ஆனால், அவை அத்தனையும் கொரோனா வைரஸ் தவிடு பொடியாக்கி விட்டது. லாக்டவுனுக்கு முன்னதாக பைக் ரேஸ் காட்சிகள் சென்னையில் படமாக்கப்பட்டதை தொடர்ந்து, அதன் போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் வைரலாகின. வலிமை படத்தின் ஷூட்டிங் பாதியிலேயே நிற்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது தல அஜித்தின் வலிமை படத்தை இந்தியிலும் உருவாக்கி பான் இந்தியா படமாக வெளியிட போனி கபூர் திட்டம் தீட்டி வருவதாக தகவல்கள் கசிந்துள்ளன. வலிமை படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி நடித்து வருவதால், இந்தி மொழியில் வலிமை படம் வெளியானாலும், நல்ல கலெக்‌ஷனை அள்ளும் என போனி கபூர் யோசனை செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின்றன. 

நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்யும் வலிமை படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.இதன் அப்டேட்டுக்காக மிகுந்த ஆவலுடன் காத்திருக்கிறார்கள் ரசிகர்கள்.கடந்த ஆண்டு தல அஜித்திற்கு அம்சமான ஆண்டு என்றே கூறலாம். ஒரே ஆண்டில் விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை என இரு வெற்றி படங்களை தந்துள்ளார். விஸ்வாசம் படத்தில் மாஸாகவும், நேர்கொண்ட பார்வை படத்தில் கிளாஸாகவும் நடித்து ரசிகர்களுக்கு விருந்தளித்தார். 

அஜித் சமூக வலைத்தளங்களில் இல்லையென்றாலும் அவர் குறித்த செய்திகள் வைரலாவது வழக்கமாக உள்ளது. விஸ்வாசம் திரைப்படம் 1.61 கோடி பார்வையாளர்களை பெற்று கடந்த வாராதில் முதலிடம் பிடித்துள்ளது.மேலும் இதுவரை இந்த லாக்டவுன் நேரத்தில் அதிக பேரால் பார்க்கப்பட்ட திரைப்படம் என்ற சாதனையையும் விஸ்வாசம் திரைப்படம் படைத்துள்ளது.