தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரும் பாக்ஸ் ஆபீஸ் சாம்ராட்டாகவும் இருந்து வரும் அஜித் குமார் அவர்களின் 62 வது திரைப்படமாக உருவாகவுள்ள ‘விடாமுயற்சி’ திரைப்படத்தின் அப்டேட் கடந்த மே 1 அவரது பிறந்த நாளை முன்னிட்டு வெளியிடப்பட்டது. லைகா தயாரிப்பில் உருவாக உள்ள இப்படத்தினை இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கவுள்ளார். மேலும் படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய அனிரூத் இசையமைக்கவுள்ளார். இது தொடர்பாக வெளியான அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவு வைரலானது. மேலும் தொடர்ந்து இணையத்தில் விடாமுயற்சி டைட்டில் டிரெண்ட்டிங்கில் உள்ளது. மேலும் விடாமுயற்சி திரைப்படத்திற்கு முன் வேலைகளில் படக்குழு இறங்கியுள்ளது அதே நேரத்தில் அஜித் அவர்கள் தற்போது தனது வாழ்நாள் ஆசையான அமைதிக்கான பைக் பயணத்தில் மும்முரமாக இறங்கியுள்ளார். அதன் ஒரு பகுதி விரைவில் முடிந்து அடுத்த மாதத்திலிருந்து படப்பிடிப்பில் கலந்து கொள்வதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் தயாரிப்பாளர் தனஞ்செயன் அவர்கள் நமது கலாட்டா தமிழ் சிறப்பு பேட்டியில் கலந்து கொண்டு தமிழ் திரையுலகில் வரவிருக்கும் அடுத்த பெரிய திரைப்படங்களின் நிலவரம் குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்தார். அதில் அஜித் குமாரின் 62 வது திரைப்படமான ‘விடாமுயற்சி’ திரைப்படம் குறித்து பேசிய அவர்,

"விடாமுயற்சி க்கு உதாரணம் அஜித் சார் தான்.. 95 சதவீதம் நபர்கள் வெற்றிக்காக ஓடிட்டே இருப்பாங்க அவங்களுக்கு தேவையான ஊக்கம் விடாமுயற்சி. அந்தளவு ஊக்கமளிக்கும் தலைப்பை வைத்ததற்கே அஜித் சாருக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும். மகிழ் திருமேனி அவர்கள் கண்டிப்பா ஒரு அற்புதமான படம் கொடுப்பார்.

படத்தில் ஆக்ஷன் இல்லாமல் இருக்காது. அதே நேரத்தில் சமுதாயத்திற்கு தேவையான கருத்துள்ள படமாகவும் இருக்கும்.. கேவலமான சுமாரான கமர்ஷியல் படங்களை அவர் பண்ண மாட்டார். மகிழ் திருமேனி மேல் இருக்கும் நம்பிக்கை என்னென்னா அவர் எது பண்ணாலும் ஒரு cult classic தான் பண்ணுவார். அப்படி ஒரு ஆக்ஷன் நிறைந்த பெரிய பட்ஜெட் படமாக விடாமுயற்சி வரும்" என்றார்.

மேலும் தயாரிப்பாளரும் திரைப்பட ஆலோசகருமான தனன்ஜெயன் அவர்கள் நமது கலாட்டா தமிழ் பேட்டியில் விக்ரமின் தங்கலான் திரைப்படம் குறித்தும் சூர்யா வின் கங்குவா திரைப்படம் குறித்தும் பகிர்ந்து கொண்ட சுவாரஸ்யமான தகவல்கள் அடங்கிய முழு வீடியோ இதோ..