தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவராக வலம் வரும் தயாரிப்பாளர் KE.ஞானவேல் ராஜா அவர்கள் தனது ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் சார்பில் அட்டகாசமான படைப்புகளை தொடர்ந்து வழங்கி ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். சூர்யாவின் ஜில்லுனு ஒரு காதல் படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமான KE.ஞானவேல் ராஜா அவர்கள் தொடர்ந்து பருத்திவீரன், சிங்கம், நான் மகான் அல்ல, சிறுத்தை, அலெக்ஸ் பாண்டியன், ஆல் இன் ஆல் அழகுராஜா, பிரியாணி, மெட்ராஸ், டார்லிங், கொம்பன், மாசு என்கிற மாசிலாமணி, இன்று நேற்று நாளை, காதலும் கடந்து போகும், இறைவி, டார்லிங் 2, சிங்கம் 3, தானா சேர்ந்த கூட்டம், கஜினிகாந்த், நோட்டா, தேவராட்டம், மகாமுனி, மிஸ்டர் லோக்கல், டெடி உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார்.

இதனை அடுத்து மெட்ராஸ் திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் இயக்குனர் பா.ரஞ்சித்துடன் இணைந்துள்ள KE.ஞானவேல் ராஜா அவர்கள் சீயான் விக்ரம் கதாநாயகனாக நடிக்கும் தங்கலான் திரைப்படத்தை தயாரிக்கிறார். பிரம்மாண்டமான பீரியட் திரைப்படமாக தங்கலான் திரைப்படம் தயாராகி வருகிறது. அதேபோல் சிறுத்தை படத்திற்கு பிறகு மீண்டும் இயக்குனர் சிவா உடன் கைகோர்த்திருக்கும் KE.ஞானவேல் ராஜா சூர்யா கதாநாயகனாக நடிக்கும் சூர்யா 42 திரைப்படத்தை தயாரித்து வருகிறார். இந்த திரைப்படமும் பிரம்மிப்பூட்டும் வகையில் பெரிய பட்ஜெட் படமாக தயாராகி வருகிறது. இந்த இரண்டு திரைப்படங்களும் 3D தொழில்நுட்பத்தில் தயாராகி பல மொழிகளில் வெளியாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இதனிடையே தயாரிப்பாளர் KE.ஞானவேல் ராஜா தனது ஸ்டுடியோ கிரீன் சார்பில் தயாரித்துள்ள பத்து தல திரைப்படம் வருகிற மார்ச் 30ம் தேதி ரிலீஸ் ஆகிறது. கன்னடத்தில் சூப்பர் ஹிட்டான மஃப்டி படத்தின் தமிழ் ரீமேக்காக சில்லுனு ஒரு காதல் படத்தின் இயக்குனர் ஒபெலி.N.கிருஷ்ணா இயக்கத்தில் சிலம்பரசன்.TR மற்றும் கௌதம் கார்த்திக் இணைந்து நடித்துள்ள பத்து தல திரைப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்நிலையில் நமது கலாட்டா சேனலுக்கு அளித்த பிறகு பேசிய தயாரிப்பாளர் KE.ஞானவேல் ராஜா அவர்களிடம் ஐயப்பனும் கோஷியும் படத்தின் ரீமேக்கை எடுக்க இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விரும்பியதாகவும் சூர்யா மற்றும் கார்த்திக் இருவரையும் நடிக்க வைக்க விரும்பியதாகவும், அப்படத்தை தயாரிக்க உங்களை அணுகியதாகவும் பேசப்பட்டதே அது உண்மையா? என கேட்டபோது, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்களுக்கு ஐயப்பனும் கோஷியும் மிகவும் பிடித்த படம் என கேள்விப்பட்டேன். ஆனால் இந்த மாதிரி எதுவும் நடக்கவில்லை. எல்லா மொழிகளிலும் எல்லா ஹீரோக்களும் அவருக்காக தான் காத்திருக்கிறார்கள். எங்கு போனாலும் லோகேஷ்.. லோகேஷ்.. லோகேஷ்.. மும்பை போனாலும் லோகேஷ்.. ஹைதராபாத் போனாலும் எல்லா ஹீரோக்களும் லோகேஷ்.. லோகேஷ்.. தான். அனைவரும் அவரோடு இணைந்து பணியாற்ற விரும்புகிறார்கள். அப்படி இருக்கையில் அவர் ஏன் ரீமேக் செய்ய வேண்டும்” என பதில் அளித்துள்ளார். தயாரிப்பாளர் KE.ஞானவேல் ராஜா அவர்களின் அந்த முழு பேட்டி இதோ…