பண்டிகை நாட்களையொட்டி வெளியாகும் படம் என்றாலே மக்களுக்கும் சரி திரைத்துறையினருக்கும் சரி நல்ல பொழுதுபோக்காகவும் வருமானம் ஈட்டும் நிலவரமாகவும் இருக்கும். அதன்படி பெரும்பாலான திரைப்படங்கள் பண்டிகை நாட்களில் வெளியாவது வழக்கம். சமீபத்தில் கூட பொங்கல் பண்டிகையையொட்டி விஜயின் ‘வாரிசு’ திரைப்படமும் அஜித் குமாரின் ‘துணிவு’ திரைப்படமும் வெளியானது. இரு படங்களுக்கு மக்கள் கூட்டம் கூட்டமாக சென்று பெருவாரியான வரவேற்பை கொடுத்தனர். அதே நேரத்தில் வசூல் நீலவரப்படி உலகளவில் மிகப்பெரிய வசூல் வேட்டையும் செய்தது.

அதன்படி இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையையடுத்து வரவிருக்கும் முக்கியமான பண்டிகை சித்திரை 1 தமிழ் புத்தாண்டு. வரும் ஏப்ரல் 14 வரவிருக்கும் தமிழ் புத்தாண்டு பண்டிகையில் வெளியாகவிருக்கும் திரைப்படங்கள் ருத்ரன், திருவின் குரல், யானை முகத்தான், சொப்பன சுந்தரி, தமிழரசன், சாகுந்தலம், ரிப்பப்பரி. இந்த பட்டியலில் மக்கள் மத்தியில் உச்ச நடிகர்கள் என்றிருப்பவர்கள் படங்கள் இடம் பெறாதது இந்த ஆண்டு மிகப்பெரிய ஏமாற்றமாக ரசிகர்கள் மத்தியில் உள்ளது. இருந்தும் இந்த படங்கள் வெளியாகி மக்கள் மத்தியில் என்ன விமர்சனம் பெறுகிறது என்பதனை படம் வெளியான பின்பு தான் தெரியும்.

பெரிய படங்கள் இந்த ஆண்டு ஏப்ரல் 14 வெளியாகாமல் இருப்பது ஆச்சர்யம் அளிக்க காரணம். இதற்கு முந்தைய ஆண்டுகளில் ஏப்ரல் 14 ம் தேதி தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு வெளியான படங்கள் பட்டியல் தான். அதன்படி கடந்த இருபது ஆண்டுகளில் தமிழ் புத்தாண்டு தினத்தையொட்டி வெளியான முக்கியமான நடிகர்கள், இயக்குனர்களின் படங்களின் பட்டியலை விளக்குவதே இந்த தொகுப்பு..

அலைப்பாயுதே - 2000

தேதி - ஏப்ரல் 14

இயக்குனர் – மணிரத்னம்

நடிகர்கள் – மாதவன் , ஷாலினி

பத்ரி - 2001

தேதி - ஏப்ரல் 12

இயக்குனர் – அருண் பிரசாத்

நடிகர்கள் – விஜய், பூமிகா சாவ்லா, விவேக்

டும் டும் டும் - 2001

தேதி - ஏப்ரல் 13

இயக்குனர் – அழகம் பெருமாள்

நடிகர்கள் – மாதவன் , ஜோதிகா

ஜெமினி - 2002

தேதி - ஏப்ரல் 12

இயக்குனர் – சரண்

நடிகர்கள் – விக்ரம், கிரண்

தமிழன் - 2002

தேதி - ஏப்ரல் 14

இயக்குனர் – மஜீத்

நடிகர்கள் – விஜய், பிரியங்கா சோப்ரா

தம் - 2003

தேதி - ஏப்ரல் 13

இயக்குனர் – வெங்கடேஷ்

நடிகர்கள் – சிம்பு, ரக்ஷிதா

அரசு - 2003

தேதி - ஏப்ரல் 14

இயக்குனர் – சுரேஷ்

நடிகர்கள் – சரத் குமார், சிம்ரன், ரோஜா, வடிவேலு

குத்து - 2004

தேதி - ஏப்ரல் 14

இயக்குனர் – வெங்கடேஷ்

நடிகர்கள் – சிம்பு, ரம்யா

கில்லி - 2004

தேதி - ஏப்ரல் 17

இயக்குனர் – தரணி

நடிகர்கள் – விஜய், த்ரிஷா, பிரகாஷ் ராஜ்

சச்சின் - 2005

தேதி - ஏப்ரல் 14

இயக்குனர் – ஜான் மகேந்திரன்

நடிகர்கள் – விஜய், ஜெனிலியா, வடிவேலு

மும்பை எக்ஸ்பிரஸ் - 2005

தேதி - ஏப்ரல் 14

இயக்குனர் – சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ்

நடிகர்கள் – கமல் ஹாசன், மனிஷா கொய்ராலா

சந்திரமுகி - 2005

தேதி - ஏப்ரல் 14

இயக்குனர் – பி வாசு

நடிகர்கள் – ரஜினிகாந்த், பிரபு, ஜோதிகா, நயன்தாரா

திருப்பதி - 2006

தேதி - ஏப்ரல் 14

இயக்குனர் – பேரரசு

நடிகர்கள் – அஜித், சதா

சந்தோஷ் சுப்பிரமணியம் - 2008

தேதி - ஏப்ரல் 11

இயக்குனர் – மோகன் ராஜா

நடிகர்கள் – ஜெயம் ரவி, ஜெனிலியா, பிரகாஷ் ராஜ்

ஒரு கல் ஒரு கண்ணாடி - 2012

தேதி - ஏப்ரல் 13

இயக்குனர் – ராஜேஷ்

நடிகர்கள் – உதயநிதி ஸ்டாலின், ஹன்சிகா, சந்தானம்

நான் சிகப்பு மனிதன் - 2014

தேதி - ஏப்ரல் 11

இயக்குனர் – திரு

நடிகர்கள் – விஷால், லக்ஷ்மி மேனன்

ஒ காதல் கண்மணி - 2015

தேதி - ஏப்ரல் 17

இயக்குனர் – மணிரத்னம்

நடிகர்கள் – துல்கர் சல்மான், நித்யா மேனன்,

காஞ்சனா 2 - 2015

தேதி - ஏப்ரல் 17

இயக்குனர் – ராகவா லாரன்ஸ்

நடிகர்கள் – ராகவா லாரன்ஸ், டாப்சி, நித்யா மேனன்

தெறி - 2016

தேதி - ஏப்ரல் 14

இயக்குனர் – அட்லி

நடிகர்கள் – விஜய், சமந்தா, எமி ஜாக்சன்

ப.பாண்டி - 2017

தேதி - ஏப்ரல் 14

இயக்குனர் – தனுஷ்

நடிகர்கள் – ராஜ் கிரண், ரேவதி, தனுஷ், மடோனா செபஸ்டின், பிரசன்னா, சாயா சிங்

காஞ்சனா 3 - 2000

தேதி - ஏப்ரல் 12

இயக்குனர் – ராகவா லாரன்ஸ்

நடிகர்கள் - ராகவா லாரன்ஸ், ஓவியா, வேதிகா

கர்ணன் – 2021

தேதி - ஏப்ரல் 9

இயக்குனர் – மாரி செல்வராஜ்

நடிகர்கள் – தனுஷ், ரஜீஷா விஜயன், லால்

பீஸ்ட் – 2022

தேதி - ஏப்ரல் 13

இயக்குனர் – நெல்சன் திலீப் குமார்

நடிகர்கள் – விஜய், பூஜா ஹெக்டே