இதுவரை இல்லாத அளவிற்கு இந்த பொங்கலை தமிழ் சினிமா ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், அவர்களுக்கு விருந்து வைக்கும் வகையில் நேற்று ஜனவரி 11ஆம் தேதி தமிழ் சினிமாவின் இருவரும் நட்சத்திரங்களான அஜித்குமார் மற்றும் தளபதி விஜய் ஆகியோரின் துணிவு மற்றும் வாரிசு ஆகிய திரைப்படங்கள் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகின.

முன்னதாக சதுரங்க வேட்டை & தீரன் அதிகாரம் ஒன்று படங்களின் மூலம் முக்கிய இயக்குனராக முத்திரை பதித்து, தொடர்ந்து அஜித்குமார் உடன் இணைந்து நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை என அடுத்தடுத்து ஹிட் படங்கள் கொடுத்த இயக்குனர் H.வினோத் இயக்கத்தில் ஹட்ரிக் ஹிட்டாகும் வகையில் தயாராகி வெளிவந்துள்ளது துணிவு திரைப்படம்.

நீரவ் ஷா ஒளிப்பதிவில், ஜிப்ரான் இசையமைத்திருக்கும் துணிவு திரைப்படத்தை போனிகபூர் அவர்கள் தயாரிக்க, உதயநிதி ஸ்டாலின் அவர்களின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்டது. இந்நிலையில் துணிவு திரைப்படத்தின் படத்தொகுப்பாளர் நமது கலாட்டா சேனலுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் பல சுவாரசியமான தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

அந்த வகையில் இன்றைய சினிமா ரசிகர்கள் மத்தியில் படத்தின் நீளம் ஒரு குறையாக இருக்கக் கூடாது என்பதற்காகவே துணிவு திரைப்படத்தின் நீளம் குறைக்கப்பட்டதா? என அவரிடம் கேட்டபோது, “ஸ்கிரிப்ட்டாகவே அவர்கள் முடிவு செய்து தான் போனார்கள். இவ்வளவு நேரத்திற்குள் தான் வரும் என முடிவு செய்து தான் போனார்கள். எனவே அதற்காக படத்தின் நீளத்தை அதிகப்படுத்துவது குறைப்பது இல்லை. கதைக்கு என்ன தேவைப்படுகிறதோ அதுதான். அந்தப் படத்திற்கான ரிதம் எப்படி இருக்கிறதோ அதை பொறுத்துதான். அதற்காக அதிகமாக வைத்து குறைத்தது மாதிரி எல்லாம் இல்லை. அந்த தளத்திற்கு என்ன தேவைப்பட்டதோ அதை ஆர்கானிகா-க நேர்மையாக செய்தோம் அதற்கான நீளம் தான் வந்தது” என விளக்கமளித்துள்ளார். படத்தொகுப்பாளர் விஜய் வேலுகுட்டியின் அந்த முழு பேட்டி இதோ…