தளபதி விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் வாரிசு திரைப்படம் ’ ரசிகர்களின் பெரும் ஆதரவினை பெற்று கொண்டாட்டங்களுடன் திரையில் ஓடிக் கொண்டிருக்கின்றது. பெரும் எதிர்பார்ப்பு மத்தியில் வெளியான படம் இப்படத்தின் கொண்டாட்டங்கள் பல இடங்களை நடைபெற்று கொண்டிருகிறது மேலும் பொங்கல் பண்டிகையொட்டி வாரிசு திரைப்படம் வெளியானதால் முன்பதிவு மும்முரமாக நடந்து கொண்டிருக்கின்றது. இந்நிலையில் வாரிசு படத்தின் இயக்குனர் வம்சி பைடிபள்ளி அவர்கள் நமது கலாட்டா பிளஸ் பேட்டியில் கலந்து கொண்டு பல சுவாரஸ்யமான தகவல்களையும் விஜயுடன் பணியாற்றிய அனுபவம் குறித்து பகிர்ந்து கொண்டார். இதில் ஏன் வாரிசு படம் பொங்கல் தினத்தையொட்டி வெளிவரவேண்டும், மற்ற மாதங்களில் வெளிவந்தாலே படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும். வசூல் ரீதியாக வெளியிட்டீர்களா? என்ற கேள்விக்கு,

அவர், "அப்படி இல்லை, வாரிசு படம் பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்திற்கான படம். மனித உணர்வுகளின் கொண்டாட்டத்திற்காகவும்.குடும்பங்களின் கொண்டாட்டத்திற்காகவும், வாழ்க்கையின் கொண்டாட்டங்களை அடிப்படையாக கொண்டதாகவும் உருவாக்கப்பட்டது. வாரிசு படக் கதையின் சாரமே கொண்டாட்டம் தான்.கிறிஸ்துமஸ் நாளில் தான் கிறிஸ்துமஸ் பரிசு தரவேண்டும் அப்போது தான் அதற்கான மதிப்பு இருக்கும். அது போல தான் இது போன்ற சரியான படங்களை சரியான நேரத்தில் வெளியிட வேண்டும். குடும்பங்களுக்கான படங்களை குடும்பங்கள் கூட்ட கூட்டமாக வந்து பார்க்க வேண்டும் அதற்கு சரியான நேரம் பொங்கல். என்னை பொறுத்தவரை ஒரு நம்பிக்கையை ஒரு படம் தர வேண்டும். அதை சரியான நேரத்தில் கொடுத்திருக்கிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார்,

குடும்பங்களின் உணர்வை மையப்படுத்தி உருவாகி உள்ள வாரிசு படம் தமிழமெங்கும் வெற்றிகரமாக இரண்டாவது நாள் கொண்டாட்டங்களுடன் ஓடிக் கொண்டிருக்கின்றது. இப்படத்தில் விஜய் உடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், ஜெயசுதா, ஷ்யாம், சங்கீதா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். முன்னதாக தமன் இசையில் வெளியான பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் ஒலித்து கொண்டிருக்கையில் பொங்கல் தினத்தையொட்டி வெளியான வாரிசு படத்தை பார்க்க குடும்பங்கள் தொடர்ந்து திரையரங்குகளுக்கு படையெடுக்க தொடங்கியுள்ளனர். நிச்சயம் இந்த ஆண்டின் மிகப்பெரிய படமாக வாரிசு அமையும் என்பதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

மேலும் இயக்குனர் வம்சி விஜய் நடித்து வெளிவந்துள்ள வாரிசு படம் குறித்த சுவாரஸ்யமான தகவல்களையும் அவரது திரைப்பயனத்தின் அனுபவம் குறித்தும் பகிர்ந்து கொண்ட முழு வீடியோ இதோ..