இந்தியாவில் மிக முக்கியமான பிரபலங்களில் ஒருவராக இருப்பவர் உலக அழகி ஐஸ்வர்யா ராய். தமிழில் இருவர் படம் மூலம் அறிமுகமான இவர் தொடர்ந்து தமிழ். இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்து வருகிறார்.தமிழ் , இந்தி என இரு மொழிகளிலும் முன்னணி நடிகையாக பல தாசப்தங்களாக வலம் வரும் உலக அழகி ஐஸ்வர்யா ராய் அவர்களுக்கு கடந்த 2007 ம் ஆண்டு பிரபல பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சான் அவர்களுடன் திருமணம் நடைபெற்றது. தம்பதியினருக்கு ஆரத்யா என்ற 12 வயது பெண் குழந்தை முடிந்துள்ளது. எந்தவொரு விழா நிகழ்சிகளாக இருந்தாலும் ஐஸ்வர்யா ராய் அவர்களுடன் அவரது மகள் ஆரத்யா கலந்து கொள்வது வழக்கம்.

இது தொடர்பாக அவ்வபோது புகைப்படங்கள் வெளியாகவதும் வழக்கம். சமீபத்தில் ஐஸ்வர்யா ராய் அவர்களின் மகளான ஆர்த்யா அவர்களுக்கு உடல் நிலை சரியில்லை என்றும் அவர் அரியவகை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார் என்றும் பல யூடியூப் சேனல்கள் அபத்தமான வதந்திகளை பரப்பி வந்தனர். மேலும் அவர் கவலைக்கிடமாக இருப்பதாகவும் சிலர் இறந்து விட்டதாகவும் குறிப்பிட்டு இருந்தனர். இதுகுறித்து முன்னதாக நடிகர் அபிஷேக் பச்சான் கடுமையாக கோபபட்டு முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று பேசியிருந்தார் என்பது குறிப்பிடதக்கது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சி ஹரி சங்கர், சாமான்யாரின் குழந்தையோ, நட்சதிரங்களின் குழந்தையோ பாரபட்சமின்றி ஒவ்வொரு குழந்தைகளையும் மாண்புடன் மரியாதையுடனும் நடத்தப்பட வேண்டும்.அதற்கு அவர்கள் தகுதியானர்வர்கள். ஒரு குழந்தையின் உடல்நலன், மன நலம் பற்றி தவறான தகவல்களை பரப்புவது ஒருபோது ஏற்றுக் கொள்ள முடியாதது. பிரபலங்கள் குறித்து பல வதந்திகள் பரவுவது இது முதல் முறையல்ல.. இருந்தாலும் குழந்தை என்றும் பாராமல் அவதூறு பரப்புவர்களின் மனப்பிறழ்வை காட்டுகிறது என்றார்.

மேலும் இது குறித்து யூடூப் மற்றும் கூகுள் நிறுவனங்கள் தங்கள் கருத்தை தெரிவித்தன. அதில் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை தகவல்களை தடுப்பதில் சிரமம் உள்ளது. வாடிக்கையாளர்களே அது போன்ற விஷயங்களை கண்டறிந்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வர முடியும். நேரடியாக எங்களுக்கு கட்டுப்பாடு செய்ய வாய்புகள் இல்லை. புகாரின் அடிப்படையிலே நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்று தெரிவித்தது. பின் இந்த வழக்கில் நீதிமன்றம் அபத்தங்கள் பரப்பிய யூடியூப் சேனல்களுக்கும், இணையதளங்களுக்கும் சம்மன் அனுப்பியுள்ளது.