இன்று முதல் செயல்படும் தொழிற்சாலைகளுக்கான வழிமுறைகளைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, 40 நாட்கள் ஊரடங்கு நேற்று முதல் முடிவடைந்த நிலையில், இன்று முதல் வரும் 17 ஆம் தேதி வரை, 3 வது முறையாக ஊரடங்கு உத்தரவு நீட்டிகக்ப்பட்டள்ளது.

ஆனாலும், பொதுமுடக்க காலத்தில் நடைமுறையில் இருந்து சில கட்டுப்பாடுகளை நீக்கி, சி விசயங்களுக்குத் தளர்வுகளும் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று முதல் செயல்படும் தொழிற்சாலைகளுக்கான வழிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அது என்னவென்று தற்போது பார்க்கலாம்.

- தொழிற்சாலைகள், தகவல்தொழில்நுட்ப நிறுவனங்கள், கட்டுமான பணிகளுக்கும் இணையதளத்தில் விண்ணப்பித்து அனுமதி பெற வேண்டும்.

- சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், கிராமப்புற தொழில்கள், தனிக்கடைகள் செயல்பட அனுமதி தேவையில்லை.

- சென்னையில் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் ஊரடங்கு முழுமையாகக் கடைப்பிடிக்கப்படும்.

- பிளம்பர், எலக்ட்ரீசியன், ஏசி மெக்கானிக் உள்ளிட்ட பணியாளர்கள் அனுமதி பெறும் வகையில் சிறப்ப இணையதளம் அறிவிக்கப்பட்டுள்ளது.

- அதன்படி, http://tnepass.tnega.org என்ற இணையதளத்தில், அனுமதி பெறலாம் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

- நாள்தோறும் 2 முறை கிருமிநாசினி கொண்டு பணியிடங்களைச் சுத்தம் செய்ய வேண்டும் என்றும், வலியுறுத்தப்பட்டுள்ளது.

- கழிப்பறைகளை ஒவ்வொரு மணி நேரத்திற்கும் சுத்தம் செய்ய வேண்டும் என்றும், அறிவுறுத்தப்பட்டுள்ளது.

- 200 தொழிலாளர்களுக்கு மேல் பணிபுரியும் தொழில் நிறுவனங்களில் மருத்துவர் இருக்க வேண்டும் என்றும், தமிழக அரசு வலியுறுத்தி உள்ளது.

இந்த வழிமுறைகளை முறையாகப் பின்பற்றி, தொழிற்சாலைகளை நடத்திக்கொள்ளலாம் என்று தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.