தஞ்சை, கடலூர், அரியலூர், திருவாரூர் மாவட்டங்களில் நாளை முழு ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் என்று மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகள் சிகப்பு மண்டலமாகவும், பாதிப்பு சற்று குறைவா உள்ள பகுதிகள் ஆரஞ்சு மண்டலங்களாகவும் பிரிக்கப்பட்டு, கொரோனா தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Thanjai, Ariyalur complete lockdown for tomorrow

அதன்படி, தமிழகத்தில் நேற்று வரை கிருஷ்ணகிரி மாவட்டம் மட்டும், பச்சை மண்டலங்கள் இருந்த நிலையில், இன்று அந்த மாவட்டம் ஆரஞ்சு மண்டலத்திற்கு மாறி உள்ளது. இதன் மூலம், தமிழகத்தில் தற்போது ஒரு மாவட்டம் கூட பச்சை மண்டலத்தில் இடம் பெறவில்லை.

இந்நிலையில், சிகப்பு மண்டலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தடுப்பு பணிகள் முழுவீச்சில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

அதன்படி, தஞ்சாவூரில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இதுவரை 62 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், தஞ்சையில் நாளை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தற்போது அறிவித்துள்ளார். இதனால் மருந்தகங்கள், பால் கடைகள் மட்டும் இயங்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

Thanjai, Ariyalur complete lockdown for tomorrow

திருவாரூர் மாவட்டத்தில் 29 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.  இதனைத் தொடர்ந்து, திருவாரூரில் நாளை முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். 

தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களைத் தொடர்ந்து கடலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களிலும் நாளை முழு ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் என மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.

இதன்படி, குறிப்பிட்ட இந்த மாவட்டங்களில் மருந்தகங்கள், பால் கடைகள் மற்றும் அம்மா உணவகங்கள் மட்டுமே இயங்கும் என்றும் மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்து உள்ளார்.

இதனைத்தொடர்ந்து, நாளை மறுநாள் 4 ஆம் தேதி முதல் இந்த பகுதிகளில் மத்திய - மாநில அரசுகள் புதிதாக அறிவித்துள்ள சில தளர்வுகளுடன், பகுதி நேர ஊரடங்கு அமலில் இருக்கும்.

அதேபோல், திருநெல்வேலி மாவட்டத்தில், நெல்லை மாநகராட்சியில் மட்டும் நாளை முழு முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.