சசிகலாவின் புதிய புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.

சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சசிகலா, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு, தண்டனை அனுபவித்து வருகிறார்.

இதனிடையே, சிறையில் மூத்த அதிகாரிகளுக்கு சசிகலா தரப்பில் லஞ்சம் கொடுக்கப்பட்டால், அவருக்குச் சிறையிலேயே சகல வசதிகளும் செய்துகொடுக்கப்பட்டதாகக் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு குற்றச்சாட்டு எழுந்தது.
மேலும், சிறையில் அடைக்கப்பட்ட சசிகலா, மாற்று உடையில் வெளியே ஷாப்பிங் சென்று வந்ததாக வீடியோ ஒன்றும் வெளியானது. இது தொடர்பாக உயர்மட்ட குழு விசாரணை நடத்தியது.

இந்நிலையில், சசிகலாவின் புதிய புகைப்படம் தோற்றம் தற்போது வெளியாகி உள்ளது. இந்த புதிய தோற்றத்தில், அவர் ப்ரவுன் கலர் சுடிதாரில் கை கட்டியபடி சிறை வளாகத்தில், ஸ்டைலாக நிற்கிறார். அவர் அருகே சற்று தள்ளி ஒரு பெண் காவலரும் நிற்கிறார். அந்த படம் செல்போனில் படமாக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, இந்த புகைப்படம் பழைய சர்ச்சையின் போது எடுக்கப்பட்டதா? அல்லது சமீபத்தில் எடுக்கப்பட்ட புகைப்படமா? என்று புதிய சர்ச்சை எழுந்துள்ளது. இது தொடர்பாக சிறைத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

​​​​​​​

குறிப்பாக, சசிகலா விரைவில் தண்டனை காலம் முடிந்து வெளியே வர உள்ள நிலையில், அவரைப் பற்றிய செய்திகளும், வதந்திகளும் பரப்பப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.