நிர்வாண நிலையில் காதல் ஜோடியின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில் உல்லாசத்திற்குப் பின் காதல் ஜோடி தற்கொலை செய்துகொண்டார்களா என்று சந்தேகம் எழுந்துள்ளது.

சேலம் செவ்வாபேட்டை பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவர், அங்குள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்துள்ளார். இந்நிலையில், காலையில் வழக்கம் போல் கல்லூரிக்குச் சென்ற சுரேஷ், நேற்று இரவு வீடு திரும்பவில்லை.

இதனால், அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர்கள் பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர். ஆனால், சுரேஷ் கிடைக்காத நிலையில், காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், கோபி என்பவருக்கு சொந்தமான கார் ஷெட்டில், சுரேஷின் கார் நிறுத்தப்பட்டிருந்ததைக் கண்டு, உள்ளே சென்று பார்த்துள்ளனர்.

அப்போது, சுரேஷ் மற்றும் இன்னொரு இளம்பெண்ணும் காரில் நிர்வாண நிலையில், சடலமாகக் கிடந்துள்ளனர்.
இதனையடுத்து, உடல்களைப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார், தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். அப்போது, சுரேஷ் உடன் இருந்த பெண்,
அப்பகுதியைச் சேர்ந்த ரவியின் மகள் ஜோதிகா என்பது தெரியவந்தது.

மேலும், சுரேஷ் - ஜோதிகா இருவரும் காதலித்து வந்துள்ள நிலையில், பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால், காதல் ஜோடிகள் இருவரும் உல்லாசமாக இருந்துவிட்டு தற்கொலை செய்துகொண்டார்களா? இல்லை, காரில் மூச்சு விட முடியாமல் உயிரிழந்தார்களா என்று போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, சேலத்தில் காதலர்கள் ஜோடியாக நிர்வாண நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியையும், பல்வேறு சந்தேகங்களையும் எழுப்பி உள்ளது.