பீகார் மாநிலத்தில் வெள்ளத்தில் மூழ்கி 5 பேர் உயிரிழந்தனர். 

பீகார் மாநிலத்தில் 13 மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை செய்து வருகிறது. இதனால், அங்குள்ள கடிஹார் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, அங்குள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், அந்த மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகள் யாவும், நிறைந்து வழிகின்றன.

floods five people dead

வெள்ளப்பெருக்கு காரணமாக, அப்பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ள நீர் புகுந்து இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடிஹார் மாவட்டத்திற்கு உட்பட்ட போச்சாஹி கிராமத்தில் பழங்குடி இன மக்கள் வசித்து வரும் நிலையில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 சிறுவர்கள், அப்பகுதியில் விளையாடிக்கொண்டிருந்தனர். அப்போது, எதிர்பாராத விதமாக, அருகிலிருந்த குழிக்குள் தவறி விழுந்து, வெள்ளத்தில் சிக்கி பரிதாபமாக அவர்கள் 5 பேரும் உயிரிழந்தனர். 

இது தொடர்பாக விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தவர்களின் உடல்களை தேடி வருகின்றனர். இதனிடையே, கடந்த 24 மணி நேரத்தில் வெள்ளத்தில் மூழ்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை பத்தாக உயர்ந்துள்ளது.