ஜி.எஸ்.டி.வரி செலுத்த முடியாத நெருக்கடியால் தொழில் அதிபர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார்.

மராட்டிய மாநிலம் அவுரங்காபாத் மாவட்டம் வாலுஜ் தொழிற்பேட்டை பகுதியில், 53 வயதான விஷ்ணு ராம்பாவ் என்பவர், இரும்பு தொழிற்சாலை நடத்தி வந்தார்.

இதனிடையே, நாட்டில் நிலவும் பொருளாதார மந்தநிலை காரணமாக, அவரது தொழில் நஷ்டமடைந்ததாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து, கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் காணப்பட்ட அவர், பந்தபூர் பகுதியில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இது தொடர்பாக விரைந்த வந்த போலீசார், விஷ்ணு ராம்பாவ் வீட்டையும், அவர் அணிந்திருந்த சட்டையையும் பரிசோதித்தனர். அப்போது, அவர் சட்டைப் பையிலிருந்து கடிதம் ஒன்று கைப்பற்றப்பட்டது.

அதில், “ஜி.எஸ்.டி.வரி செலுத்த முடியாத நெருக்கடியால் தற்கொலை செய்துகொள்கிறேன்” என்று எழுதப்பட்டிருந்தது. இதனால், அதிர்ச்சியடைந்த போலீசார், அவரது உடலைப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விஷ்ணு ராம்பாவ் தற்கொலை குறித்து வழக்குப் பதிவு செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.