இலங்கை பிரதமராக மஹிந்த ராஜபக்சே இன்று பதவியேற்றார். 

இலங்கையில் கடந்த 16 ஆம் தேதி அதிபர் தேர்தல்  நடைபெற்றது. இதில், கிட்டத்தட்ட 13 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் கோத்தபய ராஜபக்சே வெற்றி பெற்றார். அதன்படி, நேற்று முன் தினம் இலங்கையின் 8 வது அதிபராக அவர் பதவி ஏற்றார்.  

Mahinda Rajapaksa appointed as Sri Lanka Prime Minister

இதனையடுத்து, இலங்கை பிரதமர் பதவியை ரணில் விக்கிரமசிங்கே ராஜினாமா செய்ய வேண்டும் என்று அவருக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டது. இதனால், நாட்டு மக்களின் தீர்ப்புக்கு மதிப்பளிக்கும் வகையில், தமது பிரதமர் பதவியை ராஜினாமா செய்வதாக ரணில் விக்கிரமசிங்கே அறிவித்தார். அதன்படி, ராஜினாமா கடிதத்தை அதிபருக்கு அவர் அனுப்பி வைத்தார். அவரின் ராஜினாமா கடிதம் அதிபரால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, இலங்கையின் புதிய பிரதமராக, தனது அண்ணன் மகிந்த ராஜபக்சேவை, கோத்தபய ராஜபக்சே நியமித்தார். இதனால், 3 வது முறையாகப் பிரதமராக இன்று மகிந்த ராஜபக்சே பதவியேற்றார். அவருக்கு, இலங்கை நாடாளுமன்றத்தில் அதிபர் கோத்தபாய ராஜபக்சே பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். 

Mahinda Rajapaksa appointed as Sri Lanka Prime Minister

இதனிடையே, வரும் 2020 ஆம் ஆண்டு இலங்கையில் பொதுத்தேர்தல் நடைபெறும் வரை, மகிந்த ராஜபக்சே தலைமையிலான இடைக்கால அரசே தொடரும் என்பது குறிப்பிடத்தக்கது.