12 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை ஊர் மக்கள் அடித்து உதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த இடலாக்குடியில் “சதாவதானி செய்குதம்பி பாவலர் அரசு மேல்நிலைப்பள்ளி” செயல்பட்டு வருகிறது. அங்கு ஏராளமான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் தற்காலிக ஆசிரியராகப் சுரேஷ் என்பவர் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், பள்ளியில் நேற்று சிறப்பு வகுப்பு நடைபெற்றது. பின்னர், சிறப்பு வகுப்புகள் முடிந்து அனைவரும் வீட்டிற்கு புறப்பட்டனர். பள்ளியிலிருந்து அனைத்து ஆசிரியர்களும் சென்றபிறகு, பள்ளி அருகில் உள்ள சில இளைஞர்கள், பள்ளி வளாகம் மற்றும் அங்குள்ள சிறிய மைதானத்தில் விளையாடுவது வழக்கம்.

அதன்படி, இளைஞர்கள் விளையாட வந்துள்ளனர். அப்போது, ஒரு குறிப்பிட்ட வகுப்பறையிலிருந்து ஒரு பெண்ணின் சினுங்கள் சத்தம் கேட்டுள்ளது. இதனால், இளைஞர்கள் சிலர் மெதுவாக வந்து, அந்த வகுப்பறைக்குள் எட்டிப்பார்த்துள்ளனர்.

அப்போது, ஆசியரிர் சுரேஷ், மாணவியை பாலியல் பலாத்காரம் செய்யும் நோக்கத்துடன் சில்மிஷத்தில் ஈடுபட்டிருந்தார். அந்த மாணவி, அந்த ஆசிரியரிடமிருந்து மீண்டு வரமுடியாமல் போரடிக்கொண்டிருந்தார்.

இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த இளைஞர்கள், வகுப்பறைக்குள் சென்று, ஆசிரியர் சுரேஷை பள்ளிக்கு வெளியே இழுத்து வந்து, தர்ம அடி கொடுத்தனர். மேலும், அப்போது ஊர் மக்கள் சேர்ந்து, சுரேஷை போலீசாரிடம் ஒப்படைத்தனர். அப்போதும், ஊர் மக்கள் மீண்டும் அடி உதை என அவரை வெளுத்து வாங்கினர்.

இதனையடுத்து, அவரை கைது செய்த போலீசார், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.