மருமகளின் கள்ளக் காதலைக் மாமனார் கண்டுபிடித்ததை அடுத்து, கள்ளக்காதல் ஜோடியை ஊர்மக்கள் மரத்தில் கட்டி வைத்து அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலம் பிந்த் பகுதியைச் சேர்ந்த திருமணம் ஆன ஆண் ஒருவருக்கு, பக்கத்து ஊரைச் சேர்ந்த திருமணம் ஆன பெண் ஒருவருடன் தகாத உறவு ஏற்பட்டுள்ளது. 

Madhya Pradesh Illegal Relation Couple

அந்த பெண்ணின் கணவர் இரவு பணிக்குச் செல்லும் நேரத்தில், அடிக்கடி அந்த பெண்ணின் வீட்டிற்கு அந்த ஆண் வந்து செல்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார். இதனால், வாரம் 3,4 முறை இருவரும் உல்லாசம் அனுபவித்து வந்தனர். இந்த தகவல் அந்த ஊர் முழுவதும் கசிந்தது.

இந்நிலையில், நேற்று நள்ளிரவு நேரத்தில், அந்த பெண்ணின் கணவர் இரவு பணிக்குச் சென்றுவிடவே, வழக்கம்போல் கள்ளக் காதலன் அந்த பெண்ணின் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, அவர்கள் இருவரும் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர்.

இதனை மறைந்திருந்து பார்த்த அந்த பெண்ணின் மாமனார், கிராம மக்கள் உதவியுடன், இருவரையும் கையும் களவுமாகப் பிடித்தனர். 

Madhya Pradesh Illegal Relation Couple

இதனையடுத்து, அந்த ஆணை அங்குள்ள மரத்தில் கட்டி வைத்து, தர்ம அடி கொடுத்தனர். அப்போது, ஊர்மக்களே சேர்ந்து, அந்த பெண்ணையும் தாக்கினர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.