ஜார்கண்ட் பல்கலைக்கழக மாணவி கூட்டு பாலியல் வழக்கில் அதிரடியாக 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஜார்கண்ட் சட்ட பல்கலைக்கழகத்தில் பயிற்று வந்த இளம் பெண் ஒருவர், தனது ஆண் நண்பருடன் கடந்த 26 ஆம் தேதி, அங்குள்ள சங்ஹிராமாப்பூர் கிராமத்தில் சாலையில் நின்று பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது, அந்த வழியாகச் சிலர், துப்பாக்கியைக் காட்டி அந்த பெண்ணின் ஆண் நண்பரை அங்கிருந்து விரட்டியடித்துள்ளனர். இதனையடுத்து துப்பாக்கி முனையில், அந்த பெண்ணை பலவந்தமாக அவர்கள் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

இதனையடுத்து, அந்த பெண்ணை அங்கேயே விட்டுவிட்டு, அவர்கள் தப்பிச் சென்றுள்ளனர். இதிலிருந்து நடக்க முடியாமல் மீண்ட வந்த மாணவி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிரமாகச் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இது குறித்து விரைந்து வந்த போலீசார், வழக்குப் பதிவு செய்து, தனிப்படை அமைத்து, கூட்டு பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டவர்களைத் தீவிரமாகத் தேடி வந்தனர். 

இதனிடையே, அந்த வழக்கில் தொடர்புடைய 12 பேரை, போலீசார் இன்று அதிரடியாகக் கைது செய்தனர். மேலும், அவர்கள் பயன்படுத்திய செல்போன், இரு சக்கர வாகனம், நாட்டுத் துப்பாக்கி உள்ளிட்டவற்றைக் கைப்பற்றினர். அத்துடன், நாட்டுத் துப்பாக்கி எங்கிருந்து யாரிடம் வாங்கப்பட்டது என்பது குறித்தும் போலீசார் தீவிரமாக தனித்தனியாக விசாரித்து வருகின்றனர்.