ஆபரணத் தங்கத்தின் விலை இன்று வரலாறு காணாத அளவு ஏற்றம் கண்டு, ஒரு சவரன் 32 ஆயிரத்து 500 ரூபாயைத் தாண்டியுள்ளது.

இந்த ஆண்டு தொடக்கத்தில் அதவாவது ஜனவரி 1 ஆம் தேதி ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 23 ஆயிரத்து 880 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஆனால், அடுத்த சில நாட்களிலேயே 31 ஆயிரத்து 432 ரூபாய்க்கு விற்பனையாகத் தொடங்கின. இதனால், நகை வாங்கும் வாடிக்கையாளர்கள் மிகுந்த கலக்கம் அடைத்தனர்.

பின்னர், தங்கத்தின் விலை ஏறுவதும் இறங்குவதுமாக இருந்து வந்த நிலையில், நேற்றைய தினம் தங்கத்தின் விலை 32 ஆயிரத்து 96 ரூபாய்க்கு விற்பனையானது.

இந்நிலையில், முன் எப்போதும் இல்லாத அளவில், வரலாறு காணாத வகையில் தங்கம் விலை இன்று உயர்ந்து, ஒரு சவரன் 32 ஆயிரத்து 500 ரூபாயைத் தாண்டியுள்ளது.

அதன்படி, சென்னையில் இன்று ஒரு கிராம் 22 கேரட் தங்கத்தின் விலை, 21 ரூபாய் உயர்ந்து 4 ஆயிரத்து 72 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 32 ஆயிரத்து 576 ரூபாய்க்கு விற்பயைாகி வருகிறது.

அதேபோல், 24 கேரட் தங்கம் ஒரு கிராம் 4 ஆயிரத்து 276 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதேபோல், ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 34 ஆயிரத்து 208 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது.

இதேபோல், வெள்ளி ஒரு கிராம் 52 ரூபாய் 40 காசுகளுக்கு விற்பனையாகி வருகிறது. ஒரு கிலோ வெள்ளி 52 ஆயிரத்து 400 ரூபாய்க்கு விற்பனையாகி வருவது குறிப்பிடத்தக்கது.