திடீர் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவர் ராமதாஸ் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், தமிழக அரசியலில் முக்கிய நபராக வலம் வருகிறார். தமிழக முழுவதும் கணிசமான அளவுக்கு வாக்கு வங்கி வைத்திருப்பவர்.

இந்நிலையில், தீவிர அரசியலில் ஈடுபட்டு வந்த அவருக்குக் கடந்த சில நாட்களுக்கு முன்பு, உடல் நிலை மோசமடைந்தது. இதனையடுத்து, கட்சி பணிகளை அவரது மகன் அன்புமணி ராமதாஸ் கவனித்து வந்தார்.

இதனிடையே, ராமதாஸின் உடல் இன்று அதிகமான அளவில் பாதிக்கப்பட்ட நிலையில், இன்று காலை அவர் அவசர அவசரமாகச் சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, அவருக்குத் தீவிரமாக கிசிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனையடுத்து, மருத்துவர் ராமதாஸுக்குத் தீவிரமான காய்ச்சல் மற்றும் முதுகு வலி அதிக அளவிலிருந்ததால், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியானது.

இதனைத்தொடர்ந்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சுகாதாரத்துறை முதலமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் நேரில் சென்று நலம் விசாரித்தனர். அப்போது, ராமதாஸ், உடல் நலமுடன் இருப்பதாக, மருத்துவர்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, பாமக நிர்வாகிகள் பலரும், அப்பல்லோ மருத்துவமனைக்குப் படையெடுத்து வருகின்றனர். மேலும், பல்வேறு கட்சியினரும், அவரைப் பார்க்க அப்பல்லோ மருத்துவமனைக்கு வருகைதந்த வண்ணம் உள்ளனர்.