"ரஜினி - கமல் இணைந்தால் கமல்தான் முதல்வர் வேட்பாளர்" என்று நடிகை ஸ்ரீப்ரியா தெரிவித்துள்ளார்.

தமிழக அரசியலில் ரஜினி - கமல் இணைந்து செயல்பட வேண்டும் என்று காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவிமணியன் உட்பட பலரும்தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். 

Rajini - Kamal

அதன்படி, அவர்கள் இருவரும் இணைந்து செயல்பட்டால் யார் முதல்வர் வேட்பாளர் என்ற கேள்வி எழுந்தது. இது தொடர்பாகவும், ஊடகங்களில் தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வந்தது.

இதனிடையே, ஒடிசாவிலிருந்து சென்னை விமான நிலையம் திரும்பிய கமல்ஹாசனிடம், செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதில் அளித்துப் பேசிய அவர், “ரஜினியும், நானும் இணைவதில் அதிசயம் ஒன்றும் இல்லை. கடந்த 44 ஆண்டுகளாக இணைந்துதான் இருக்கிறோம். அரசியலில் இணைய வேண்டிய நிலை வந்தால் இணைவோம்” என்று பதில் அளித்தார்.

Rajini - Kamal

இதனையடுத்து, சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், “மக்களின் நலனுக்காக, கமலுடன் இணையும் சூழல் ஏற்பட்டால் நிச்சயம் இணைவோம்” என்று தெரிவித்தார். இது தமிழக அரசியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், நடிகை ஸ்ரீப்ரியா இது தொடர்பாக இன்று சென்னையில் உள்ள தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டி அளித்தார். அதில், "அரசியலில் ரஜினி - கமல் இணைந்தால் கமல்தான் முதல்வர் வேட்பாளர்" என்று  தெரிவித்தார். இதனால், தற்போது பரபரப்பு ஏற்பட்டுள்ளது.