இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 59,905 ஆக உயர்ந்துள்ள நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,990 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்தத் தமிழக அரசு குழு அமைத்துள்ளது. ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் சி.ரங்கராஜன் தலைமையில், 24 பேர் கொண்ட உயர்மட்டக்குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

திருமழிசையில் தற்காலிக மொத்த காய்கறி சந்தை அமைக்கப்பட்டுள்ள பகுதியில் முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் உள்ளிட்டோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

இதனிடையே, கொரோனா தொற்று காரணமாகச் சென்னை மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 2 பெண்கள் இன்று காலை உயிரிழந்து உள்ளனர்.

சென்னை மெரினா கடலில் விழுந்து பயிற்சி மருத்துவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் ஏன் தற்கொலை செய்துகொண்டார் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

குறிப்பாக, சென்னை கோடம்பாக்கம் மண்டலத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 546 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் கொரோனா பாதிப்புக்குப் பலியானோர் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்தது. அதேபோல், தமிழகத்தில் கொரோனாவுக்கு பாதிப்பு எண்ணிக்கை 3,046 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகம் முழுவதும் காவல்துறையை சேர்ந்த 107 பேருக்கு கொரோனா பாதிப்பு ஊறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன், தீயணைப்புத்துறையை சேர்த்து மொத்தம் 128 பேருக்கு கொரோனா பரவி உள்ளது.

கோயம்பேடு சந்தை மூலம் சென்னை நீங்கலாகத் தமிழகத்தில் இன்று 200க்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

விழுப்புரத்தில் 69 பேருக்கும், திருவள்ளூரில் கோயம்பேடு சந்தையோடு தொடர்புடைய 14 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் கோயம்பேடு சந்தை மூலம் தொடர்புடைய மேலும் 40 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது

கொரோனா காரணமாகச் சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 70 வயது மூதாட்டி இன்று உயிரிழந்துள்ளார்.

பெரம்பலூரில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த இளைஞர் ஒருவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழகத்தில் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,009 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 40 ஆக அதிகரித்துள்ளது.

இந்திய அளவில் அதிகம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில், சென்னைக்கு 4வது இடம் கிடைத்துள்ளது.

புதுச்சேரியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11ஆக உயர்வு!

மகாராஷ்டிர மாநிலத்தில் இதுவரை 714 போலீசாருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், 5 பேர் உயிரிழந்தனர், 61 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். அத்துடன், 648 பேர் சிகிச்சையில் உள்ளானதாகவும், மகாராஷ்டிர காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்தியாவிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிர மாநிலத்தில் 19,063 பேருக்கு கொரோனா பாதிப்ப உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல், அங்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 731 ஆக உயர்ந்துள்ளது.

டெல்லியில் கொரோனா பாதித்த இந்தோ திபெத்திய எல்லை பாதுகாப்புப் படை வீரர்களின் எண்ணிக்கை 100ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 6 வீரர்களுக்கு கொரோனா உறுதியானது.

மேற்குவங்க மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவினால் 11 பேர் உயிரிழப்புந்துள்ளனர். புதிதாக 108 பேருக்கு நோய்த்தொற்று உறுதியானது. இதுவரை அங்கு 99 உயிரிழப்புகள் உட்பட 1,786 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஒட்டுமொத்தமாக கொரோனாவுக்கு இந்தியா முழுவதும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 59,905 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் நாடு முழுவதும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,990 ஆக உயர்ந்துள்ளது.