ஊரடங்கின் போது ஓட்டல் அறையில் உல்லாசத்தில் ஈடுபட்ட ஒரு காதல் ஜோடிக்கு, பிரம்பு அடி கொடுத்து தண்டனை வழங்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா என்னும் கொடிய வைரஸ் நோய்க்கு உலகமே பயந்து, ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில், அவரவர் வீடுகளில் பொதுமக்கள் முடங்கி உள்ளனர். இதனால், இயல்பு வாழ்க்கை முடங்கி, அசாதாரமான சூழல் உலகம் முழுவதும் நிலவி வருகிறது.

இப்படிப்பட்ட சூழலில், திருமணம் ஆகாத காதல் ஜோடி ஒன்று உல்லாச பறவையாக மாறி, அத்துமீறிய சம்பவம் இந்தோனேசியாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பொதுவாக இந்தோனேசியாவின் ஏஸ் மாகாணத்தில், மதச்சட்டத்தை மீறுபவர்களுக்குப் பொதுமக்கள் முன்னிலையில் மிக கடுமையான தண்டனைகள் வழங்கப்படுவது வழக்கம்.

இதனிடையே, கொரோனா பரவலால் அந்நாட்டில் பகுதி நேரமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால், அந்நாட்டில் பகல் வேளைகளில் மக்கள் வெளியே நடமாடுவது, முற்றிலுமாக குறைந்து காணப்படுகிறது.

இந்நிலையில், இந்தோனேசியாவின் பண்டா ஏஸில் பகுதியில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஊரடங்கை மீறி திருமணம் ஆகாத காதல் ஜோடி ஒன்று, அங்குள்ள ஓட்டலில் ரூம் எடுத்து தங்கி, உல்லாசம் அனுபவித்து வந்துள்ளது.

இது குறித்த தகவல், அந்த பகுதி போலீசாருக்கு கிடைத்துள்ளது. இதனையடுத்து, அங்கு விரைந்து சென்ற போலீசார், அந்த காதல் ஜோடியைப் பிடித்து வந்து, பொதுமக்கள் முன்னிலையில் இருவருக்கும் தலா 40 முறை பிரம்பு அடி கொடுத்து வினோதமான முறையில் தண்டனையை நிறைவேற்றினர்.

இதேபோல், ஊரடங்கு நேரத்தில் கட்டுப்பாடுகளை மீறி மது அருந்திய 4 பேருக்கு, தலா 40 முறை பிரம்பு படி தண்டனை வழங்கப்பட்டது.

இந்தோனேசியாவில் இதுபோன்ற தண்டனை வழங்கும்போது, நூற்றுக்கணக்கான மக்கள் கூடி நின்று வேடிக்கை பார்ப்பது வழக்கம். ஆனால், தற்போது கொரோனா பரவல் காரணமாக, அங்கு பகுதி நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், சுமார் 15 பேர் மட்டுமே இதை காண்பதற்காகக் கூடினர். குறிப்பாக, வந்திருந்த 15 பேரும், முககவசம் அணிந்து சமூக இடைவெளியைப் பின்பற்றி, தள்ளித் தள்ளி நின்ற படியே, இந்த தண்டனையை வேடிக்கை பார்த்தனர்.