யாரும் இல்லாத கோயிலில் 8 ஆம் வகுப்பு மாணவிக்கு தாலி கட்டிய இளைஞர் ஒருவர், சிறுமியை கர்ப்பமாக்கிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அருகில் உள்ள போடிபாளையம் பகுதியைச் சேர்ந்த பாபு என்ற இளைஞர், வேலைக்கு எதற்கும் செல்லாமல் வெட்டியாக ஊர் சுற்றித் திரிந்ததாகக் கூறப்படுகிறது.

இதனிடையே, அதே பகுதியைச் சேர்ந்த 8 ஆம் வகுப்பு படிக்கும் மாணவியிடம், காதலிப்பதாக ஆசை வார்த்தைகள் கூறி, திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசை வார்த்தை கூறி, சிறுமியின் மனசை மாற்றி உள்ளார்.

அதன் பிறகு, சிறுமியிடம் பாலியல் சில்மிசங்களில் அவர் ஈடுபட்டுள்ளார். ஆனால், சிறுமியோ திருமணத்திற்குப் பிறகு தான் எல்லாம் என்று கூறி, பாபுவின் ஆசைக்கு இணங்க சிறுமி மறுத்துவிட்டதாகத் தெரிகிறது.

இதனால், சற்று விசமத் தனமாக யோசித்த பாபு, “உடனே திருமணம் செய்து கொள்வதாக” சிறுமியிடம் சென்று கூறி உள்ளான். அதற்கு, சிறுமி தரப்பில் எந்த முடிவும் எடுக்கப்படா நிலையில், சிறுமியின் மனசைக் கலைத்து, ஆசை ஆசையாய் பேசி; சிறுமியை அந்த பகுதியில் உள்ள யாரும் இல்லாத விநாயகர் கோயிலுக்கு அழைத்துச் சென்று உள்ளார்.

ஊரடங்கு காரணமாக, பொதுமக்கள் நடமாட்டம் இல்லாத அந்த கோயிலில், யாருக்கும் தெரியாமல் மிகவும் ரகசியமாகச் சிறுமியின் கழுத்தில் தாலி கட்டி விட்டு, அவரது வீட்டிற்கே மீண்டும் அனுப்பி வைத்துள்ளான் பாபு.

தாலி கட்டிய பிறகு, அடுத்தடுத்து சந்திப்பில், சிறுமியை ஆசை வார்த்தைகள் கூறி மயக்கி, சிறுமியிடம் தனியாக உல்லாசம் அனுபவித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதில், சிறுமி கர்ப்பம் அடைந்துள்ளார்.

சிறுமியின் அன்றாட நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த சிறுமியின் பெற்றோர், அவரது உடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்தும், விசாரித்து உள்ளனர். இதனையடுத்து, சிறுமியை அவரது தாயார் அழைத்துப் பேசி உள்ளார். அப்போது, “ அதே பகுதியைச் சேர்ந்த பாபு என்ற இளைஞன், என்னைக் கட்டாயப்படுத்தி ரகசியத் திருமணம் செய்து கொண்டதாகவும், அதன் பிறகு யாரும் இல்லாத நேரத்தில் என்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும்” சிறுமி கூறி உள்ளார்.

குறிப்பா, “நான் இப்போது கருவுற்று இருப்பதாகவும்” சிறுமி, தன் தாயாரிடம் கூறி உள்ளார். இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சி அடைந்த அவரின் தாயார், இது தொடர்பாகப் பொள்ளாச்சி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் பாபுவை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், பாபுவிடம் விசாரணை நடத்திய நிலையில், அவரை அவிநாசி கிளைச் சிறையில் அடைத்தனர்.

இதனிடையே, யாரும் இல்லாத கோயிலில் 8 ஆம் வகுப்பு மாணவிக்குத் தாலி கட்டிய இளைஞர் ஒருவர், சிறுமியைக் கர்ப்பமாக்கிய சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.