அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6,67,000 பேராக அதிகரித்துள்ள நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 35 ஆயிரத்தை கடந்துள்ளது.

கொரோனா என்னும் கொடிய வைரசுக்கு உலகிலேயே, அமெரிக்கா தான் மிகப் பெரிய அளவில் பாதிப்பைச் சந்தித்து வருகின்றன. அமெரிக்காவில், இதுவரை இல்லாத அளவுக்கு, அங்கு உயிரிழப்புகளும் பாதிப்பு எண்ணிக்கையும் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது.

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 4500 பேர் கொரேனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவில் தற்போதைய நிலவரப்படி 6,67,000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதேபோல், 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இதுவரை அமெரிக்காவில் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் பாதிப்பிலும், உயிரிழப்பிலும் அமெரிக்கா தொடர்ந்து முதல் இடம் வகிக்கிறது.

குறிப்பாக, அமெரிக்காவில் பலரும் வேலை இழப்பைச் சந்தித்துள்ளனர். கடந்த வாரம் 52 லட்சம் பேர் வேலைக்காக விண்ணப்பித்திருந்த நிலையில், தற்போது 2.2 கோடியாக அதிகரித்து உள்ளது.

அமெரிக்காவில், கொரோனா பாதிப்பால் 7 பேரில் ஒருவர் வேலை வாய்ப்பை சந்தித்துள்ளதாகச் சந்தித்துள்ளதாக, அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த பலி மற்றும் பாதிப்பு எண்ணிக்கை, அடுத்த சில நாட்களில் மேலும் உயரக்கூடும் என்றும் அஞ்சப்படுகிறது. இதனால், அமெரிக்க வாழ் மக்கள் கடும் பீதியடைந்துள்ளனர்.