2021-22ல் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.4 சதவீதமாக இருக்கும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

ஊரடங்கு உத்தரவு 2 வது முறையாக மே 3 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ், தற்போது செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ கொரோனாவால் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகளை ரிசர்வ் வங்கி மிக தீவிரமாகக் கவனித்து வருகிறது என்றும், ஊரடங்கு உத்தரவால் ஏற்பட்டுள்ள சூழ்நிலையை ரிசர்வ் வங்கி உன்னிப்பாக கவனிக்கிறது" என்றும் குறிப்பிட்டார்.

Rbi governor shakthikanta das byte

“கொரோனாவுக்கு எதிரான போருக்கு ஆர்பிஐ முழுமையாகத் தயாராக உள்ளது என்றும், வங்கிகள் வழக்கம்போல் இயங்குவதை ஆர்பிஐ உறுதி செய்துள்ளதோடு, இக்கட்டான சூழலிலும் வங்கிகள் இயங்குகின்றன” என்றும் சுட்டிக்காட்டினார்.  

அத்துடன், “கொரோனாவால் மிகப்பெரிய பொருளாதார சவால் காத்திருக்கிறது என்றும், நாட்டின் பொருளாதார நிலைமையை ரிசர்வ் வங்கி உன்னிப்பாக கவனித்து வருகிறது” என்றும் குறிப்பிட்டார். 

மேலும், “2021-22ல் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.4% ஆக இருக்கும் என்றும், வங்கிகளில் போதுமான அளவு ரொக்கம் கையிருப்பு உள்ளது” என்றும் தெரிவித்தார்.

அதேபோல், “நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு 476.5 பில்லியன் டாலர்களாக உள்ளது என்றும், உலகப் பொருளாதாரம், 9 ட்ரில்லியன் டாலர் அளவுக்கு இழப்பைச் சந்திக்கும் என கணிக்கப்பட்டுள்ளதால், வங்கி சேவைகள் தேக்கம் இல்லாமல் செயல்பட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும்” சக்திகாந்த தாஸ் தெரிவித்தார்.

Rbi governor shakthikanta das byte

“ஊரடங்கால் நாட்டின் மொத்த நுகர்வில் 25 முதல் 30 சதவீதம் குறைந்துள்ளது என்றும், இதனால் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது” என்றும் அவர் வேதனை தெரிவித்தார். 

குறிப்பாக, “உலகிலேயே ஜிடிபி வளர்ச்சி கணிசமாக உயர்வு கொண்டுள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்று குறிப்பிட்ட சக்திகாந்த தாஸ், இந்தியாவின் வளர்ச்சி 1.9% என ஐஎம்எஃப் கணித்துள்ளதால், இது ஜி-20 நாடுகளில் அதிகம்” என்றும் குறிப்பிட்டார். 

“கொரோனா பரவல் காரணமாக நாட்டின் மின்சார தேவை 20% முதல் 25% வரை குறைந்துள்ளது என்றும், ஆட்டோ மொபைல் தயாரிப்பு மற்றும் விற்பனை மார்ச் மாதத்தில் கடும் சரிவை சந்தித்துள்ளது” என்றும் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் சுட்டிக்காட்டினார். 

அதே நேரத்தில், “அவசர தேவைகளுக்கு ரிசர்வ் வங்கியிடம் இருந்து மாநில அரசுகள் 60% வரை கூடுதல் கடன் பெறலாம் என்றும், கொரோனா பாதிப்பால் ஏற்பட்ட பாதிப்புகளைச் சீர் செய்வதற்காக மாநில அரசுகள் கூடுதலாகக் கடன் பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும்” ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்தார்.

“இந்தியாவில் அரிசி, கோதுமை இருப்பு உள்ளதால் தட்டுப்பாடு எதுவும் ஏற்படாது” என்றும் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் நம்பிக்கைத் தெரிவித்தார்.