புதுச்சேரியில் வளர்ப்பு தந்தை ஒருவர் மகளுக்கு பாலியல் தொல்லை தந்த சம்பவம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

புதுச்சேரி கோரிமேடு ஜிப்மர் மருத்துவமனைக்கு அருகில் உள்ள பகுதியைச் சேர்ந்த அமுதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) வசித்து வருகிறார்.

அமுதாவின் கணவர் இறந்துவிட்ட நிலையில், தனது மகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார். ஆனால், பெண் பிள்ளையை வைத்து மிகவும் சிரமப்பட்டு வந்த அமுதா, அடுத்த சில ஆண்டுகளில் தன்னைவிட 8 வயது குறைவான ஒருவரைத் திருமணம் செய்து கொண்டார். அதன் தொடர்ச்சியாக ஹேமாவிற்கு வரிசையாக 3 பெண் குழந்தைகள் பிறந்தது.

இந்நிலையில், மனைவி ஹேமா வீட்டில் இல்லாத நேரத்தில் முதல் கணவருக்குப் பிறந்த 16 வயது சிறுமி வீட்டில் தனியாக இருந்து வந்துள்ளார். அப்போது, அமுதாவின் 2 வது கணவன் மனைவி அமுதாவுக்கு முதல் கணவரோடு பிறந்த அந்த 16 வயது சிறுமிக்குத் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

ஆனால், இதனை அந்த சிறுமி எதிர்க்கவே, “இது குறித்து அம்மாவிடம் கூறுவதாக” சிறுமி கூறி உள்ளார். ஆனால், “உன் அம்மாவிடம் சொன்னால் உன்னையும் உன் அம்மாவையும் கொன்று விடுவேன்” என்று, அவர் சிறுமியைக் கடுமையாக மிரட்டி வந்துள்ளார்.

அத்துடன், தனக்குப் பிறந்த தன்னுடைய 3 பெண் குழந்தைகளையும் அவர் அடித்துத் துன்புறுத்தி வந்துள்ளார். இதனை, முதல் கணவருக்குப் பிறந்த அந்த 16 வயது சிறுமி, தட்டிக் கேட்டுள்ளார்.

இதன் காரணமாக கடும் கோபம் அந்த வளர்ப்பத் தந்தை, அந்த 16 வயது சிறுமியை அடித்தும், உடம்பில் சூடு வைத்தும், அடித்தும் துன்புறுத்தி வந்துள்ளார்.

இதனையடுத்து, வேலைக்கு சென்றிருந்த அந்த சிறுமியின் தாய், சிறுமிக்கு சூடு வைத்து அடித்துத் துன்புறுத்தியதைக் கண்டு, கடும் அதிர்ச்சியடைந்துள்ளார்.

இதனையடுத்து, பாதிக்கப்பட்ட தன் மகளை மீட்டு ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கு, சிறுமிக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

அப்போது, தனது வளர்ப்புத் தந்தையால், தனக்கு நேர்ந்துகொண்டு இருக்கும் பாலியல் தொந்தரவுகள் குறித்தும், தனது தாயாரிடம் அந்த சிறுமி கூறி அழுதுள்ளார்.

இதனால், இன்னும் அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாயார், அங்குள்ள காவல் நிலையத்தில், “தன் 16 வயது மகளை, தன் கணவன் பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்து விடுவதாக மிரட்டியது தொடர்பாகவும்” புகார் அளித்தார்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், மகளை பாலியல் கொடுமை செய்த வளர்ப்புத் தந்தையை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து, விசாரணை மேற்கொண்டனர். விசாரணைக்குப் பிறகு, புதுச்சேரி மத்தியச் சிறையில் அவரை அடைத்தனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.