கொரோனா ஊரடங்கால் வருமானம் இல்லாதவர்களைக் குறிவைத்து, “ஒரு மாதத்திற்குப் பிறகு பணம் கொடுத்தால் போதும்” என்று, பாலியல் கும்பலின் வித்தியாசமான அறிவிப்பு பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, உலகமே முடங்கிப் போய் உள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், உலகம் முழுவதும் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து உள்ளது. அமெரிக்காவில் மட்டும் 2 கோடிக்கும் மேற்பட்டோர் வேலையில்லாமல் தவித்து வருகின்றனர். 

இந்த வேலையில்லா திண்டாட்டம் இந்தியாவிலும் எதிரொலித்து வருகிறது. இதனால், இந்தியா உட்பட ஒட்டு மொத்த உலக நாடுகளிலும் கடம் பொருளாதார மந்த நிலை ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக, இந்தியா உட்பட பல உலக நாடுகளில் பலரும் வருமானம் இழந்து தவித்து வருகின்றனர். சிலர், கிடைக்கும் வேலைகளைப் பார்த்து வருகின்றனர். இன்னும் சிலர், எப்படியாவது பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக, சில தவறான செயல்களில் இறங்கி பணம் சம்பாதிக்க வித்தியாசம் வித்தியாசமாக யோசித்து வருகின்றனர்.

அப்படி தான், மலேசியா நாட்டில் ஒரு கும்பல் ஒன்று கொரோனா ஊரடங்கால் வருமானம் இல்லாதவர்களைக் குறிவைத்து, ஒரு வித்தியாசமான அறிவிப்பை அறிவித்து உள்ளனர். 

அதாவது, மலேசியாவில் வேலை செய்யும் வெளி நாட்டவர்களைக் குறிவைத்தே இந்த வித்தியாசமான அறிவிப்பு வெளியிடப்பட்டு இருக்கிறது. அந்த அறிவிப்பில், “உங்கள் கையில் பணம் இல்லை என்று வருந்தவோ, தயங்கவோ வேண்டாம். ஏனென்றால், எங்கள் சேவையை நீங்கள் முதலில் அனுபவித்து மகிழுங்கள். அதன் பிறகு, ஒரு மாதம் கழித்து நீங்கள் கட்டணம் செலுத்திக் கொள்ளலாம்” என்கிற அறிவிப்பு தான் அது.

இந்த விளம்பத்தைச் சாதாரணமாகப் பார்த்தால், ஏதோ கிரிடிட் கார்ட் விளம்பரம் போல் தான் தெரியும். ஆனால், இந்த விளம்பரம் மிகவும் ரசகிசயமாக பரப்பப்பட்டு வருகிறது. அதாவது, இந்த அறிவிப்பானது முடங்கிப் போய் உள்ள பாலியல் தொழிலை வளர்க்கும் விதமாக, மிகவும் வித்தியாசமாகப் பரப்பப்பட்டு வந்திருக்கிறது.

இந்த அறிவிப்பு விளம்பரத்தைப் பார்த்த மலேசியா போலீசார் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனையடுத்து, அந்த விளம்பரத்தில் உள்ள தொடர்பு எண்ணுக்கு அழைத்து மேலும் விபரங்களைக் கேட்டதுடன், முகவரியையும் வாடிக்கையாளர்கள் போல விசாரித்து உள்ளனர்.

அதன்படி, மலேசியாவின் ஜோகூர் மாநிலத்தில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், இந்த பாலியல் தொழில் கும்பல் ரகசியமாக இயங்கி வந்தது கண்டுப்பிடிகக்ப்பட்டது. இதனையடுத்து, அந்த கும்பலை போலீசாரல் அதிரடியாகக் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் வியாட்னாம், இந்தோனேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த 21 பெண்கள், இந்த பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டு வந்திருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து, அந்த பெண்களை மீட்ட போலீசார் இந்த பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தி வந்த 12 ஆண்களையும், உள்ளூர் பெண் ஒருவரையும் போலீசார் கைது செய்து உள்ளனர். 

மேலும், கைது செய்யப்பட்ட கும்பலிடம் விசாரணை நடத்திய போலீசார், “ பொதுமக்கள் யாரிடமும் பணம் இல்லாத நிலை ஒரு பக்கம் இருக்கும் நிலையில், எங்களை நம்பியிருந்த பாலியல் தொழிலாளிகளும் பணம் இல்லாமல் அவதிப்பட்டு வருவதால், வங்கி கிரிடிட் கார்ட் போல் நாங்களும் இந்த பாலியல் தொழிலை, காலத்திற்கு ஏற்றார் போல் வித்தியாசமாக யோசித்து சம்பாதிக்க நினைத்தோம், தற்போது போலீசாரிடம் மாட்டிக்கொண்டோம்” என்று கூறியுள்ளனர்.

மேலும், இந்த பாலியல் கும்பல் வாடிக்கையாளர்களை மேலும் கவரும் விதமாக We Chat, Michat, WhatsApp உட்பட சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் தங்களிடம் இருக்கும் அழகிகளின் கவர்ச்சிகரமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் பகிர்ந்து, புதிய புதிய வாடிக்கையாளர்களை ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.