தமிழ் திரையுலகின் பொக்கிஷமாக இருக்கும் இசையமைப்பாளர்களில் ஒருவர் யுவன் ஷங்கர் ராஜா. தற்போது போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடிக்கும் வலிமை படத்திற்கு இசையமைத்து வருகிறார். விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் படத்திற்கு அனிருத் இசையில் ஒரு பாடலை பாடியுள்ளார். 

yuvanshankarraja

நேற்று பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு ஒரு கோரிக்கையை விடுத்தார். நமது ஒற்றுமையை காட்டும் வகையில் 9-ம் தேதி, வீட்டில் உள்ள மின் விளக்குகளை அணைத்து, விளக்குகள் அல்லது தீபங்களை ஏற்றி 9 நிமிடங்களுக்கு ஒளிர செய்யும் படி கூறினார். இதனையடுத்து பொதுமக்களும், பிரபலங்களும் விளக்குகளுடன் தங்களது ஒற்றுமையை வெளிப்படுத்தினர்.

yuvanshankarraja

சிலர் பட்டாசுகளை வெடித்தனர். இது போன்ற சில விஷயங்கள் விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்டது. இந்நிலையில் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா நேற்று இரவு ஒரு பதிவு செய்துள்ளார். அதில் இந்தியாவில் கொரோனா மட்டுமல்ல, முட்டாள்தனமும் அழிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.