திரையுலகில் தன்னை தானே செதுக்கி கொண்டவர் தல அஜித். நேர்கொண்ட பார்வை வெற்றிக்கு பின் H.வினோத் இயக்கத்தில் நடித்து வருகிறார் தல. போனி கபூர் இந்த படத்தை தயாரிக்கிறார். வலிமை படத்தின் ஷூட்டிங் ஐதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடந்து வந்தது. அங்கு முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில் அதனை தொடர்ந்து சென்னையில் ஒரு ஸ்டுடியோவில் ஷுட்டிங் நடந்தது. 

அதன் பின் கொரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்கு போட பட்டதால் வலிமை படத்தின் ஷுட்டிங் தடைபட்டு இருக்கிறது. இயல்பு நிலை திரும்பிய பிறகு தான் ஷுட்டிங் துவங்க முடியும் என்கிற சூழ்நிலை உள்ளது. RX 100 திரைப்பட புகழ் கார்த்திகேயா, வலிமை படத்தில் தல அஜித்துக்கு வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்ற செய்தி அடிக்கடி வருவதை காண முடிகிறது. படக்குழுவினர் தரப்பிலிருந்து இன்னும் எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வரவில்லை. 

வலிமை திரைப்படத்தை இந்தியிலும் உருவாக்கி பான் இந்தியா படமாக வெளியிட போனி கபூர் திட்டமிட்டுள்ளார். வலிமை படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி நடித்து வருவதால், இந்தி மொழியில் வலிமை படம் வெளியானாலும், நல்ல கலெக்‌ஷனை அள்ளும் என போனி கபூர் யோசனை செய்துள்ளதாகவும் சமீபத்தில் தகவல்கள் வெளியாகின்றன. 

நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்யும் வலிமை படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இதன் அப்டேட்டுக்காக மிகுந்த ஆவலுடன் காத்திருக்கிறார்கள் ரசிகர்கள். இந்நிலையில் வலிமை படத்தின் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா ட்விட்டர் பக்கத்தில், இயக்குனர் H வினோத்தை வாழ்த்தி பதிவு ஒன்றை செய்துள்ளார். அதில் ரசிகர் ஒருவர், அப்டேட் கேட்டு வாங்கி தாங்க என்று கமெண்ட் செய்ய, அதற்கு பதிலளித்த யுவன், நிச்சயம் விரைவில் வரும் என்று தெரிவித்தார். யுவன் இப்படி கூறியது தல ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் விதமாக அமைந்துள்ளது.  

இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா நேற்று இரவிலிருந்து இணையத்தை அதிர வைத்து வருகிறார். நேற்று வெளியான புகைப்படத்தில் I am a தமிழ் பேசும் indian என்று அச்சிடப்பட்ட டி.சர்ட்டை அணிந்திருந்தார். அவர், அருகில் இருக்கும் மெட்ரோ படத்தின் நடிகர், ஹிந்தி தெரியாது போடா. என்ற வாசகம் அடங்கிய டிசர்ட்டை அணிந்துள்ளார். யுவன் சங்கர் ராஜா அவருடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த இந்த புகைப்படம் நேற்று இரவிலிருந்து வைரலாகி வருகிறது.