நடிகர் STR மற்றும் ப்ளூப்பர் புகழ் இயக்குனர் வெங்கட் பிரபு இணையும் படம் மாநாடு. இப்படத்திற்கு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் ப்ரோடுக்ஷன் தயாரிக்கிறது. எப்போதும் தனது எதார்தமான கருத்தை மைய்யமாக வைத்து படம் இயக்கி வரும் வெங்கட் பிரபு, இப்படத்தில் அரசியல் கலந்த கமர்ஷியல் கருத்தை கதையில் வைத்து எடுக்கவுள்ளார். 

manadu

கல்யாணி ப்ரியதர்ஷன் ஹீரோயினாக நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் முதல் துவங்கவுள்ளதாக கூறப்படுகிறது. சபரிமலை பயணத்திற்கு பிறகு நீச்சல், உடற் பயிற்சி என ஸ்லிம்மாக மாறி வருகிறார் சிம்பு. 

rajayuvan

yuvan

தற்போது இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா தான் இசையமைக்கிறார் என்பதை உறுதி செய்தார். இயக்குனர் வெங்கட் பிரபுவுடன் இருப்பது போன்ற புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். STR-யுவன் காம்போவில் இதுவரை மன்மதன், வல்லவன், சிலம்பாட்டம், வானம், AAA போன்ற ஹிட் படைப்புகள் உருவாகியுள்ளது. இதனால் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர் STR ரசிகர்கள்.