ஜீ தமிழ் தொலைக்காட்சியில் TRPயை அள்ளிக்குவித்து வரும் சீரியல்களில் ஒன்று யாரடி நீ மோகினி.ஸ்ரீ இந்த தொடரின் நாயகனாகவும்,நட்சத்திரா நாயகியாகவும் நடித்து வருகிறார்.சைத்ரா ரெட்டி முக்கிய வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

பாத்திமா பாபு,யமுனா சின்னத்துரை,லிசா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய
வேடங்களில் வருகின்றனர்.இந்த தொடருக்கும் தொடரின் நட்சத்திரங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.அவர்களுக்கென்று தனி தனி ரசிகர் பக்கங்கள் என்று பல நட்சத்திரங்களை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

பல திருப்பங்களுடன் விறுவிறுப்பான கதைக்களத்துடன் இந்த தொடர் 1000 எபிசோடுகளை நோக்கி நகர்ந்து வருகிறது.இந்த தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் இருக்கும் வரவேற்பு குறைவதாக இல்லை,இந்த தொடர் தொடர்ந்து ஜீ தமிழுக்கு நல்ல TRP-யை பெற்று தந்து வருகிறது.

இந்த தொடரில் முக்கிய வேடத்தில் நடித்து வரும் சைத்ரா ரெட்டிக்கு ராகேஷுடன் கடந்த அக்டோபர் 23ஆம் தேதி நிச்சயதார்த்தம் முடிந்தது.இந்த புகைப்படங்களும்,வீடியோக்களும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வந்தன.தற்போது சைத்ரா மற்றும் ராகேஷ் திருமணம் கோலாகலமாக நடைபெற்று முடிந்துள்ளது.இது குறித்த புகைப்படங்களும்,வீடியோக்களும் வெளியாகி வருகின்றன.ரசிகர்களும்,பிரபலங்களும் தங்கள் வாழ்த்துக்களை சைத்ரா மற்றும் ராகேஷுக்கு தெரிவித்து வருகின்றனர்.கலாட்டா சார்பாக புதுமண தம்பதிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.