அறிமுக இயக்குனர் அன்பு இயக்கத்தில் சிபிராஜ் நடித்து வெளியான படம் வால்டர். நாய்கள் ஜாக்கிரதை படத்திற்கு பிறகு இப்படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்திருந்தார். சிபிராஜூக்கு ஜோடியாக நடிகை ஷிரின் கான்ச்வாலா நடித்தார். ரித்விகா, சனம் ஷெட்டியும் படத்தில் முக்கிய ரோலில் நடித்தார்கள். 

natty walter

11:11 நிறுவனத்தின் சார்பாக இப்படத்தை டாக்டர் பிரபு திலக் தயாரித்தார். படத்தின் சில காட்சிகள் கும்பகோணத்தில் படமாக்கப்பட்டது. நடிகர் நட்டி நட்ராஜ் மற்றும் சமுத்திரக்கனி முக்கிய ரோலில் நடிக்கின்றனர். தர்ம பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்தார். படத்தின் ட்ரைலர் மற்றும் ஜுக் பாக்ஸ் சமீபத்தில் வெளியாகி அசத்தியது. 

walter Walter

மார்ச் 13-ம் தேதி வெளியான இந்த படம் விமர்சன ரீதியாகவும், ரசிகர்கள் மத்தியிலும் நல்ல பெயரை பெற்றது. வரலாம் வா பாடல் ப்ரோமோ வீடியோவை தொடர்ந்து படத்தின் இரண்டாம் ஸ்னீக் பீக் வெளியானது. நட்டியின் வில்லத்தனம் கொண்ட நடிப்பு ரசிகர்களை ஈர்த்தது.