தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமடைந்தவர் VJ மணிமேகலை. காமெடி கலந்த பேச்சால் தனி ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார். தொடர்ந்து பல தொலைக்காட்சி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய இவர் ஹுசைன் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். 

Manimegalai

ஊரடங்கின் போது கிராமத்தில் பொழுதை கழிக்கும் மணிமேகலை தனது கணவருடன் காமெடியான வீடியோக்களை பகிர்ந்து வருகிறார். தற்போது ஊரில் உள்ளவர்களுக்கு நடனம் கற்றுத்தருவது போன்ற வீடியோவை வெளியிட்டுள்ளார். இதுபோன்ற பதிவுகள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. 

Manimegalai

சமீபத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்குபெற்று பல ரசிகர்களை கவர்ந்தார் மணிமேகலை. ஊரடங்கு நேரத்தில் திரைப்பிரபலங்களும் தங்கள் படப்பிடிப்பிற்கு செல்ல இயலாமல் சோஷியல் மீடியாவில் ஆக்ட்டிவாக உள்ளனர். ரசிகர்களுடன் லைவ்வில் தோன்றியும், அவர்கள் பணிபுரிந்த படங்களின் அனுபவம் குறித்தும் பதிவு செய்து வருகின்றனர்.