நிகழ்ச்சி தொகுப்பாளர்களில் மிகவும் பிரபலமானவர் பாவனா. இசை, நடனம், காமெடி என பல மேடை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். கிரிக்கெட் வீரர்களுடன் உரையாடல் மற்றும் கிரிக்கெட் கமென்ட்ரி போன்ற விஷயங்களில் ஈடுபடுவதால், இவருக்கென ரசிகர் பட்டாளமே உண்டு. சமீபத்தில் நடந்த மாஸ்டர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவையும் தொகுத்து வழங்கினார் பாவனா. 

Bhavna

ஊரடங்கு நேரத்தில் மக்கள் அனைவரும் அவர்களது வீட்டிலேயே பாதுகாப்பாக முடங்கியுள்ளனர். படப்பிடிப்பு இல்லாமல் வீட்டில் இருக்கும் திரைப்பிரபலங்கள் பலரும் சமைப்பது, பாடல் பாடுவது, நடனமாடுவது, உடற்பயிற்சி செய்வது என அசத்தி வருகின்றனர். 

Bhavna

இந்நிலையில் பாவனா தனது ட்விட்டர் பக்கத்தில், அற்புதமான பாடல் Mashup செய்து பதிவு செய்துள்ளார். இரண்டு மொழி பாடல்களை இணைத்து, மெட்டுக்கு ஏற்றார் போல் பாடியுள்ளார். இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் உருவான ஊர்வசி பாடலையும் அதில் பாடியுள்ளார். சமீபத்தில் மாஸ்டர் பாடலுக்கு பரதநாட்டியம் ஆடி அசத்தினார் என்பது நாம் அறிந்தவையே.