தமிழ் திரையுலகின் சின்ன கலைவானர் என்று அழைக்கப்படுபவர் நடிகர் விவேக். காமெடி ரோல் மட்டுமல்லாது எந்த ஒரு பாத்திரம் தந்தாலும் அதை ஏற்று நடிக்கக்கூடிய திறனை பெற்றவர். இயக்குனர் சிகரம் KB கண்டெடுத்த பொக்கிஷங்களில் இவரும் ஒருவர். சிறந்த நடிகன் என்பதை கடந்து சீரான சமூக பணிகள் செய்து வரும் மனிதன். 

vivekh

தற்போது குஜராத்தில் நடக்கும் அரண்மனை 3 படப்பிடிப்பின் போது தமிழ்நாட்டு லாரி ஓட்டுனர்களை சந்தித்துள்ளார். அவர்களுடன் சேர்ந்து புகைப்படமும் எடுத்துள்ளார். நெடுஞ்சாலையில் செல்லும்போது உனக்கேது தூக்கங்கள், இதயத்தில் இருப்பதோ குடும்பத்தின் ஏக்கங்கள் என்று லாரி ஓட்டுனர்களின் நிலைமையை தனது கவிதைகளால் அற்புதமாக செதுக்கியிருக்கிறார். இவ்வாறு ஜனங்கள் விரும்பும் கலைஞனாக இருப்பதால் தான் இவரை ஜனங்களின் கலைஞன் என்று கொண்டாடுகிறோம். 

vivekh vivekh

விவேக் நடிக்கும் இந்த அரண்மனை 3 படத்தில் ஆர்யா, ராஷி கண்ணா மற்றும் சாக்ஷி அகர்வால் முக்கிய ரோலில் நடிக்கின்றனர். இப்படத்தை சுந்தர்.சி இயக்கி வருகிறார். அவ்னி சினிமாஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு சத்யா இசையமைக்கிறார். விவேக் கைவசம் தாராள பிரபு மற்றும் இந்தியன் 2 போன்ற திரைப்படங்கள் உள்ளது.