தமிழ் திரையுலகின் சின்ன கலைவானர் என்று அழைக்கப்படுபவர் நடிகர் விவேக். காமெடி ரோல் மட்டுமல்லாது எந்த ஒரு பாத்திரம் தந்தாலும் அதை ஏற்று நடிக்கக்கூடிய திறனை பெற்றவர். இதில் என்ன சந்தேகம், இயக்குனர் சிகரம் KB கண்டெடுத்த பொக்கிஷங்களில் இவரும் ஒருவர். சிறந்த நடிகன் என்பதை கடந்து சீரான சமூக பணிகள் செய்து வரும் மனிதன். 

vivekh

நான் சிரித்தால் படத்தில் இடம்பெற்ற பிரேக்கப் பாடலுக்கு விவேக் நடனம் ஆடியிருப்பது போல் எடிட்டிங் செய்து அசத்தியுள்ளனர் ரசிகர்கள். இதை பார்த்துவிட்டு பாராட்டி விவேக் பதிவு செய்துள்ளார். ஹிப்ஹாப் தமிழா ஆதி நடிப்பில் சில தினங்களுக்கு முன் வெளியானது  இத்திரைப்படம் நான் சிரித்தால். இந்த படத்தை அவ்னி சினிமேக்ஸ் சார்பில் இயக்குனர் சுந்தர்.சி தயாரித்திருந்தார். அறிமுக இயக்குனர் ராணா இயக்கியிருந்தார். 

hiphopadhi vivekh

இவர் நடிப்பில் வெளியான வெள்ளை பூக்கள், பிகில் போன்ற படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றது. ஷங்கர் இயக்கும் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.