ஆக்ஷன் படத்தின் ரிலீஸை தொடர்ந்து விஷால் துப்பறிவாளன் 2,சக்ரா உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.2017-ல் மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளியான சூப்பர்ஹிட் படமான துப்பறிவாளன் படத்தின் இரண்டாம் பாகம் தான் இந்த திரைப்படம்.

Vishal Thupparivaalan 2 First Look Poster Released

இந்த படத்தை விஷாலின் விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரித்துள்ளனர்.இசைஞானி இளையராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு லண்டனில் நிறைவடைந்து அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.

Vishal Thupparivaalan 2 First Look Poster Released

சில காரணங்களால் மிஷ்கின் இந்த படத்திலிருந்து விலகியுள்ளார்.இதனையடுத்து விஷால் இந்த படத்தின் இயக்குனராக பொறுப்பேற்றுள்ளார்.இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் தற்போது வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.