தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகி வரும் மாஸ்டர் படத்தில் நடித்துவருகிறார்.இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதியும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.சில நாட்களுக்கு முன் மாஸ்டர் படப்பிடிப்பில் இருந்து விஜயை வருமானவரித்துறையினர் அழைத்து சென்று அவரது வீட்டில் சோதனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.

VijaySethupathi Tweet On Vijay IT Raid Controversy

VijaySethupathi Tweet On Vijay IT Raid Controversy

இது முடிந்த பின்னர் மீண்டும் விஜய் படப்பிடிப்பில் கலந்துகொண்டது,படப்பிடிப்பில் போராட்டம்,ரசிகர்கள் கூட்டம்,ரசிகர்களுடன் விஜயின் செல்பி என்று கடந்த சில நாட்களாக அந்த பரபரப்பு அடங்காமல் இருந்தது.நெய்வேலியில் நடைபெற்ற படப்பிடிப்பு நிறைவடைந்து படத்தின் முதல் பாடல் வரும் பிப்ரவரி 14ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

VijaySethupathi Tweet On Vijay IT Raid Controversy

VijaySethupathi Tweet On Vijay IT Raid Controversy

இந்நிலையில் சமூகவலைத்தளங்களில் விஜய் கிறிஸ்தவ மதத்தை பரப்புவதற்காகவே பல கோடி சம்பளம் வாங்குவதாகவும் இதில் தமிழ் சினிமாவின் பல நடிகர்களும் சம்பந்தப்பட்டுள்ளனர் என்றும் அதில் விஜய் சேதுபதியின் பெயரும் சேர்த்து விடப்பட்டது.இந்த செய்தி வதந்தி தான் என்பதற்கு விளக்கமளித்த விஜய்சேதுபதி வதந்தி பரப்பும் நபர்களை கண்டுகொள்ள வேண்டாம் என்பதை தெரிவிக்கவும் போய் வேற வேலை இருந்தா பாருங்க என்று தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.