தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளையடிக்கும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தற்போது தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். மலையாளத்தில் 19(1)(a), தமிழில் மாமனிதன், லாபம், கடைசி விவசாயி உள்ளிட்ட திரைப்படங்கள் விரைவில் வெளிவர உள்ளன.

மேலும் இயக்குனர் வெற்றிமாறனுடன் விடுதலை, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்கும் விக்ரம், இயக்குனர் விக்னேஷ் சிவனின் காத்துவாக்குல ரெண்டு காதல், சன் பிக்சர்ஸின் பெயரிடப்படாத புதிய படம் மற்றும் அதிதி ராவ் ஹைதாரி உடன் காந்தி டாக்ஸ் என்னும் மௌன திரைப்படம் உள்ளிட்ட திரைப்படங்களில் தற்போது மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்து வருகிறார். 

இந்நிலையில் அடுத்ததாக விஜய்சேதுபதி நடிப்பில் திரைக்கு வரும் திரைப்படம் துக்ளக் தர்பார். இயக்குனர் டெல்லி பிரசாத் தீனதயாள் இயக்கத்தில் செவன் க்ரீன் ஸ்டூடியோ சார்பில் தயாரிப்பாளர் S.S. லலித் குமார் தயாரிப்பில், தயாராகும் துக்ளக் தர்பார் திரைப்படத்திற்கு பிரபல இயக்குனர் பாலாஜி தரணிதரன் திரைக்கதை மற்றும் வசனங்களை எழுதியுள்ளார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்ய கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். 

சில தினங்களுக்கு முன்பு துக்ளக் தர்பார் திரைப்படத்திலிருந்து பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. அதனை தொடர்ந்து தற்போது துக்ளக் தர்பார் திரைப்படத்தின் துள்ளலான ரொமான்டிக் பாடலான காமி காமி பாடலின் வீடியோ வெளியாகியுள்ளது. அழகான அந்த வீடியோ பாடலை கீழே உள்ள லிங்கில் காணலாம்.