தமிழ் திரை உலகின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராகவும் தேர்ந்த நடிகராகவும் திகழ்பவர் விஜய் சேதுபதி. சாதாரண மக்களின் வாழ்வியலோடு ஒன்றி எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி மக்களின் அபிமானத்தைப் பெற்று மனதில் இடம்பிடித்து மக்கள் செல்வனாக உயர்ந்திருக்கிறார்.

கடைசியாக தமிழில் தளபதி விஜய்யுடன் மாஸ்டர் திரைப்படத்தில் மிரட்டலான வில்லனாக அசத்தியிருந்தார். தற்போது தமிழ், மலையாளம், தெலுங்கு என தென்னிந்திய மொழிகளில் அதிக கவனம் செலுத்தி நடித்து வரும் நடிகர் விஜய் சேதுபதி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தமிழில் வெளிவந்த மாநகரம் திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக்கான மும்பை கார் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்ததாக மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் தயாராகும் விக்ரம் படத்தில் நடிக்கவுள்ள விஜய் சேதுபதி சின்னத்திரையிலும் கலக்கி வருகிறார். உலகப் புகழ் சமையல் நிகழ்ச்சியான மாஸ்டர் செஃப் தமிழ் நிகழ்ச்சி சன் டிவியில் ஒளிபரப்பாகிறது. நிகழ்ச்சியின் தொகுப்பாளராக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மக்களை மகிழ்விக்க உள்ளார். 

அதேபோல் தெலுங்கில் ஒளிபரப்பாகும் மாஸ்டர் செஃப் தெலுங்கு நிகழ்ச்சியை முன்னணி நடிகை தமன்னா தொகுத்து வழங்குகிறார். இந்நிலையில் இந்நிகழ்ச்சியின் புதிய புரோமோ ஒன்று வெளியானது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் நடிகை தமன்னா இருவரும் இணைந்து வரும் மாஸ்டர் செஃப் தெலுங்குபுதிய புரோமோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த கீழே உள்ள லிங்கில் காணலாம்.