மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்து வெளிவர இருக்கும் திரைப்படம் துக்ளக் தர்பார். இயக்குனர் டெல்லி பிரசாத் தீனதயாள் இயக்கியுள்ள இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்க, நடிகர் & இயக்குனர் பார்த்திபன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். வருகிற செப்டம்பர் 10-ஆம் தேதி துக்ளக் தர்பார் நேரடியாக சன் டிவியில் வெளியாகிறது. தொடர்ந்து நெட்ஃபிலிக்ஸ் OTT தளத்திலும் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்கும் விக்ரம் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி, சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிப்பில் இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய திரைப்படத்திலும் நடித்து வருகிறார். மேலும் விஜய் சேதுபதி - டாப்சி இணைந்து நடித்திருக்கும் அனபெல் சேதுபதி திரைப்படமும் வருகிற செப்டம்பர் 17ஆம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் OTT தளத்தில் வெளியாகிறது.

அடுத்ததாக நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் புதிய ஆக்சன் திரைப்படத்தின் போஸ்டர் இன்று வெளியானது. இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் உருவாகும் மைக்கேல் திரைப்படத்தில் நடிகர் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடிக்க முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ளார்.

ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரிப்பில் அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக உருவாகும் மைக்கல் திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. மைக்கல் திரைப்படத்தின் அதிரடியான போஸ்டர் இன்று அதிகாரப்பூர்வமாக வெளியானது. அந்த போஸ்டரை கீழே உள்ள லிங்கில் காணலாம்.