தமிழ் சினிமா ரசிகர்களின் மனம் கவர்ந்த மக்கள் செல்வன் விஜய் சேதுபதி அடுத்ததாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகும் விக்ரம் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.மேலும் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் விடுதலை படத்திலும் விஜய் சேதுபதி நடித்து வருகிறார்.

தொடர்ந்து துக்ளக் தர்பார், கடைசி விவசாயி, மாமனிதன், லாபம், யாதும் ஊரே யாவரும் கேளிர் உள்ளிட்ட திரைப்படங்கள் திரைக்கு வர தயாராகி வரும் நிலையில், இயக்குனர் லோகேஷ் கனகராஜின் மாநகரம் திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக்காக தயாராகும் மும்பைக்கார் திரைப்படத்தில் தமிழில் முனீஸ்காந்த் நடித்த கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அடுத்ததாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்கும் புதிய பாலிவுட் வெப்சீரிஸின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது. பிரபல வெப்சீரிஸான ஃபேமிலி மேன் வெப்சீரிஸின் இயக்குனர்கள் ராஜ் மற்றும் டீகே இணைந்து இயக்கும் புதிய வெப்சீரிஸில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 

இந்த வெப்சீரிஸில் பிரபல பாலிவுட் நடிகர் ஷாகித் கபூர் மற்றும் ராஷி கண்ணா முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த புதிய வெப்சீரிஸின் படப்பிடிப்பு தற்போது தொடங்கப்பட்டுள்ளது என அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகியுள்ளது இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள நடிகை ராஷி கண்ணா, மீண்டும் என்னுடைய அபிமான மனிதனும் நடிகருமான விஜய்சேதுபதியோடு மூன்றாவது முறை இணைந்து பணியாற்ற உள்ளேன். நம்முடைய படப்பிடிப்பிற்கு உங்களை வரவேற்கிறேன் விஜய்சேதுபதி சார் ...என பதிவிட்டுள்ளார்.