தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தற்போது தமிழ் சினிமாவின் இன்றியமையாத நடிகராகத் திகழ்கிறார். தமிழ் மொழியைத் தாண்டி தற்போது தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட திரைப்படங்களிலும் கவனம் செலுத்தும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி கடைசியாக தெலுங்கில் நடித்து வெளிவந்த உப்பெனா திரைப்படம் மாபெரும் வெற்றி நல்ல வரவேற்ப்பை பெற்றது.

இந்நிலையில் அடுத்ததாக 19 (1) (a) மலையாளத் திரைப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி எழுத்தாளராக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். நடிகை நித்யா மேனன் கதாநாயகியாக நடிக்கும் இத்திரைப்படத்தில் விஜய்சேதுபதி நித்யா மேனனுடன் இணைந்து இந்திரஜித் சுகுமாரன், இன்றன்ஸ் ஆகியோர் நடித்துள்ளனர். மலையாள திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான அண்டோ ஜோசப் பிலிம் கம்பனி தயாரித்துள்ள திரைப்படத்தின் மூலம் பெண் இயக்குனரான இந்து VS இயக்குனராக அறிமுகமாகிறார். 

இந்து VS  எழுதி இயக்கியுள்ள திரைப்படத்தை மணிஷ் மாதவன் ஒளிப்பதிவு செய்ய 96 திரைப் படத்தின் இசையமைப்பாளரான கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக திரைப்படத்தின் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் சுவாரஸ்யத்தை கிளப்பிய நிலையில் தற்போது இத்திரைப்படத்தின் புதிய தகவல் வெளியாகி உள்ளது.  

படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்து ஃபைனல் மிக்ஸிங் செய்யப்பட்டு பார்வையிடப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை இயக்குனர் இந்து VS  தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். நடிகர் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் இணைந்து நடித்துள்ள திரைப்படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்ததால் விரைவில் திரைக்கு  வர உள்ளது. முன்னதாக திரைப்படத்தின் டீசர் டிரைலர் பாடல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Indhu (@indhusss)