உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. மே 17-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இப்படியிருக்க இந்திய முழுவதும் மது கடைகளை ஆங்காங்கே திறந்து வருகின்றனர். தமிழகத்திலும் வருகின்ற 7ம் தேதி மது கடைகளை திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

Vijay Sethupathi About Finding Hunger Vaccine

பசியில் உணவின்றி தவிக்கும் மக்களுக்கு பலர் உதவி செய்து வருகின்றனர். திரைப்பிரபலங்கள் தங்களால் இயன்றதை செய்து வருகின்றனர். அத்தியாவசிய பொருட்கள் வாங்க முடியாத மக்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள் தந்து உதவி வருகின்றனர். சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் அவதி படுவோர், இங்கு கிடைக்கும் பிஸ்கட், பால், ரொட்டி போன்றவற்றை கொண்டு சமாளித்து வருகின்றனர். 

Vijay Sethupathi About Finding Hunger Vaccine

தற்போது இதுகுறித்து மக்கள் செல்வன் விஜய்சேதுபதி ட்விட்டரில் பதிவு ஒன்றை செய்துள்ளார். அதில், பசி என்றொரு நோய் இருக்கு, அதுக்கு ஒரு தடுப்பூசி கண்டுபிடிச்சா எவ்ளோ நல்லா இருக்கும்... ஓ மை கடவுளே என்று பதிவிட்டுள்ளார். விஜய்சேதுபதி நடிப்பில் மாஸ்டர், கடைசி விவசாயி போன்ற படங்கள் வெளியாகவுள்ளது.