தமிழ் சினிமாவில் காதலில் விழுந்தேன் என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை சுனைனா. அதனைத் தொடர்ந்து மாசிலாமணி, யாதுமாகி, வம்சம் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். வெகு நாட்களுக்கு பிறகு அட்லீ இயக்கிய தெறி படத்தில் கௌரவ ரோலில் நடித்தார். கடந்த 2019-ம் ஆண்டில் எனை நோக்கி பாயும் தோட்டா, சில்லுக்கருப்பட்டி போன்ற படங்கள் வெளியாகி அசத்தின. தற்போது யோகிபாபு நடிக்கும் ட்ரிப் படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளார். 

Sunaina Shares Her Trip Movie Scene In Tiktok

ஊரடங்கு உத்தரவு காரணமாக மக்கள் அனைவரும் அவர்களது வீட்டிலேயே பாதுகாப்பாக முடங்கியுள்ளனர். மே 17-ம் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் படப்பிடிப்பு இல்லாமல் இருக்கும் திரைப்பிரபலங்கள் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கின்றனர். 

Sunaina Shares Her Trip Movie Scene In Tiktok

இந்நிலையில் நடிகை சுனைனா டிக்டாக்கில் வீடியோ வெளியிட்டு அசத்தியுள்ளார். அதில் ட்ரிப் படத்தில் யோகிபாபுவுடன் நடித்திருக்கும் காட்சியை பதிவு செய்துள்ளார். டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கும் இந்த படத்தில் கருணாகரண் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார். த்ரில்லர் கலந்த நகைச்சுவை படமாக இந்த படம் இருக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

@thesunainaa

Guess who is sitting bang opp?

♬ original sound - thesunainaa