தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகியுள்ள மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதியும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

Vijay Selfie With Fans Crosses 100K Retweets

இந்த படம் விரைவில் வெளியாகவுள்ளது.தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்களை கொண்ட நடிகர்களில் ஒருவர் விஜய்.இவர் நெய்வேலியில் மாஸ்டர் ஷூட்டிங்கில் இருந்தபோது இவரை காண ஏராளமான ரசிகர்கள் காத்திருந்தனர்.ரசிகர்களுக்காக வேனில் ஏறி கையசைத்த விஜய் அவர்களுடன் ஒரு செல்பியும் எடுத்துக்கொண்டார்.

Vijay Selfie With Fans Crosses 100K Retweets

இந்த செல்பி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வந்தது.தற்போது இந்த புகைப்படம் 100K அதாவது 1 லட்சம் ரீட்விட்களை பெற்று சாதனை படைத்துள்ளது.இது விஜய் அக்கவுண்டில் இருந்து 100K ரீட்விட்டை பெறும் 3ஆவது ட்வீட் என்ற சாதனையை நிகழ்த்தியது.இதனை தொடர்ந்து மெர்சல் படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரும் 100K ரீட்விட்களை பெற்று சாதனை படைத்துள்ளது.